பெண் இயக்குனரின் கதையை திருடி புதிய படம்! பிரபல ஹீரோ மீது புகார்!

By sathish kFirst Published Nov 22, 2018, 9:39 AM IST
Highlights

  அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய பெண் இயக்குனரான ராதா பரத்வாஜின் கதையை திருடி பிரபல நடிகர் அக்சய் குமார் தனதுபுதிய படத்திற்கு பூஜை போட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அண்மையில் நடிகர் அக்சய் குமார் பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவுடன் இணைந்த மூன்று படங்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்தார். அதில் ஒரு திரைப்படம் மிசன் மங்கள் என்று அக்சய் குமார் கூறியிருந்தார். இந்ததிரைப்படத்தில் வித்யா பாலன், டாப்சி பன்னு, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாகவும் கூறி புகைப்படம் ஒன்றையும் அக்சய் குமார் வெளியிட்டார்.

மிசன் மங்கல் திரைப்படம் இந்தியாவின் மங்கல்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை மையமாக வைத்து தயாராக உள்ள திரைப்படம் என்று அக்சய் குமார் கூறியிருந்தார். நவம்பரில் படப்பிடிப்பு துவங்கி 2019 சுதந்திர தினத்தன்று மிசன் மங்கள் திரைப்படம் வெளியாகும் என்றும் அக்சய் குமார் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய பெண் இயக்குனர் ராதா பரத்வாஜ் நடிகர் அக்சய் குமாரின் தயாரிப்பு நிறுவனத்திற்கு வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீசில், மிசன் மங்கள் என்று தாங்கள் எடுக்க உள்ள திரைப்படம் தனது ஸ்பேஸ் மாம்ஸ் என்கிற திரைப்படத்தின் கதையை திருடி எடுக்கப்பட உள்ளதாக கூறியுள்ளார். அமெரிக்காவில் இருந்து மும்பை திரும்பி அதுல் கஸ்பேகர் கம்பனியில் வேலை பார்த்ததாகவும் அப்போது ஸ்பேஸ் மாம்ஸ் கதையை கஸ்பேகரிடம் தான் கொடுத்ததாகவும் ராதா தெரிவித்துள்ளார். அந்த கதையை நடிகை வித்யா பாலனிடம் கஸ்பேகர் கூறியதாகவும் ராதா குறிப்பிட்டுள்ளார்.

வித்யா பாலன் மூலம் கதையை திருடி தற்போது தனது ஸ்பேஸ் மாம்ஸ் கதையை மிசன் மங்கள் என அக்சய் குமார் எடுக்க உள்ளதாக ராதா தெரிவித்துள்ளார். மங்கள்யான் திட்டத்தை மையமாக வைத்து யார் வேண்டுமானாலும் திரைப்படம் எடுக்கலாம் என்று கூறியுள்ள ராதா, ஆனால் மங்கல்யான் திட்டத்தில் பெண்களின் பங்களிப்பை மையமாக வைத்து தான் திரைக்கதை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த அடிப்படையில் தனது திரைக்கதையை கொண்டு தான் அக்சய் குமாரும் படம் எடுக்க உள்ளது அவர் அறிவித்துள்ள நடிகைகளின் விவரம் மூலம் தெரிய வருவதாகவும் ராதா கூறியுள்ளார். எனவே உடனடியாக மிசன் மங்கள் படத்தின் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் நீதிமன்றம் செல்ல நேரிடும் என்றும் ராதா எச்சரித்துள்ளார்.

click me!