மகளுக்கு தெரியாமல் இப்படி ஒரு செயலை செய்த அஜித்..!

Published : Nov 21, 2018, 04:50 PM IST
மகளுக்கு தெரியாமல் இப்படி ஒரு செயலை செய்த அஜித்..!

சுருக்கம்

நடிகர் அஜித் எதை செய்தாலும் அதில் ஒரு வித்தியாசமான நிகழ்வு இருக்கும்.  அதுவும் எல்லோரையும் சமமாக மதித்து மிகவும் எளிமையாக வாழ்வது தான் அவருடைய இயல்பே...!   

நடிகர் அஜித் எதை செய்தாலும் அதில் ஒரு வித்தியாசமான நிகழ்வு இருக்கும்.  அதுவும் எல்லோரையும் சமமாக மதித்து மிகவும் எளிமையாக வாழ்வது தான் அவருடைய இயல்பே...! 

தான் எப்படி சிறு வயதில் இருந்து கஷ்டப்பட்டு உழைத்து இந்த நிலைக்கு  வந்தாரோ அதே போன்று தனது பிள்ளைகளும் இருக்க வேண்டும் என  அவர்களுக்கும் எளிமையான வாழ்க்கை முறையை பற்றி சொல்லிக்கொடுப்பார்.அந்த வகையில் அஜித்துடன் ரசிகர்கள் போட்டோ எடுக்க சென்றாலும் படப்படிப்பில் உள்ள போது மட்டுமே அனுமதி அளிப்பார். யாரையும் போட்டோ எடுக்க தங்கள் வீட்டிற்கு அழைப்பது என்பது மிகவும் அரிதானது...

காரணம்....தன் மகள் மாற்றும் மகன் இவர்கள் இருவருக்குமே, இதுபோன்ற ரசிகர்கள் பற்றிய விவரம் மற்றும் தன் அப்பா இப்படியா என வேறு வித தாக்கம் வரக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளார் அஜித்.இந்த தருணத்தில் தன் குடும்பத்துடன் கோவாவிற்கு சென்ற அஜித் தினமும் காலை தன் மகளுடன் சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்துள்ளார். இதனை கவனித்த ஒரு ரசிகர் இவரை பின் தொடர்ந்து வந்து ஆசையாக தங்களுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளார்.

அப்போது, இந்த மாதிரியான விஷயங்கள் என் மகளுக்கு தெரியாது..இங்கே  போட்டோ எடுக்க வேண்டாம்...உங்கள் மொபைல் எண்ணை கொடுங்கள்.. நானே  போன் செய்கிறேன் அப்போது வந்து எடுத்துக்கொள்ளுங்கள் என தெரிவித்து  அங்கிருந்து சென்று உள்ளார்.பின்னர் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அந்த ரசிகருக்கு போன் செய்து, குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு கேட்டுள்ளார். பின்னர் அவருடன் போட்டோ    எடுத்து அனுப்பி உள்ளார் நடிகர் அஜித். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எஸ்கே ரசிகர்களை சீண்டியதா ஜீவாவின் பேச்சு? - சாக்லேட் பாயின் 'சரவெடி' பேட்டியால் எழுந்த சர்ச்சை!
ரோகிணியின் ஃபிராடு வேலைகளை புட்டு புட்டு வைத்த வித்யா; அதிரடி முடிவெடுத்த அண்ணாமலை - சிறகடிக்க ஆசை அப்டேட்