Vaadi Vaasal song :அண்ணாச்சி உடன் ஐட்டம் சாங்குக்கு குத்தாட்டம் போட்ட ராய்லட்சுமி- டிரெண்டாகும் வாடிவாசல் சாங்

By Asianet Tamil cinema  |  First Published May 20, 2022, 12:42 PM IST

The Legend Movie : லெஜண்ட் சரவணன் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் தி ஜெண்ட் படத்தில் இடம்பெறும் வாடிவாசல் என்கிற பாடலுக்கு நடிகை ராய் லட்சுமி குத்தாட்டம் போட்டுள்ளார். 


நடிகைகள் ஐட்டம் சாங்கிற்கு குத்தாட்டம் போடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடிகை சமந்தா கவர்ச்சி நடனம் ஆடிய பின்னர் முன்னணி நடிகைகள் ஐட்டம் டான்ஸ் ஆட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையடுத்து ஆச்சார்யா படத்தில் நடிகை ரெஜினா, சிரஞ்சீவியுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டார்.

அதேபோல் பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே, தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் உருவாகி உள்ள எஃப் 3 படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இவ்வாறு டோலிவுட் படங்களில் ஐட்டம் சாங் அதிகரித்து வரும் நிலையில், தற்போது கோலிவுட்டிலும் அந்த டிரெண்ட் பின்பற்றப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

அந்த வகையில், லெஜண்ட் சரவணன் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் தி ஜெண்ட் படத்தில் இடம்பெறும் வாடிவாசல் என்கிற பாடலுக்கு நடிகை ராய் லட்சுமி குத்தாட்டம் போட்டுள்ளார். இப்பாடலின் வீடியோ வெளியாகி யூடியூபில் டிரெண்டாகி வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்பாடலை பென்னி தயால் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர். சினேகன் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

தி லெஜண்ட் படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக ஊர்வசி ரவ்துலா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ரோபோ சங்கர், பிரபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இதையும் படியுங்கள்... Director Nelson : பீஸ்ட் படக்குழுவுடன் வெளிநாட்டுக்கு ஜாலியாக டூர் சென்ற நெல்சன்... விஜய் மட்டும் மிஸ்ஸிங்

click me!