Sembi :குக் வித் கோமாளி அஸ்வினுடன் சீரியஸ் ரோலில் கோவை சரளா! மிரள வைக்கும் பிரபுசாலமனின் ‘செம்பி’ பர்ஸ்ட் லுக்

Published : May 20, 2022, 11:05 AM IST
Sembi :குக் வித் கோமாளி அஸ்வினுடன் சீரியஸ் ரோலில் கோவை சரளா! மிரள வைக்கும் பிரபுசாலமனின் ‘செம்பி’ பர்ஸ்ட் லுக்

சுருக்கம்

Sembi First Look : பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, குக் வித் கோமாளி அஸ்வின் நடிப்பில் உருவாகி உள்ள செம்பி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது.

மைனா, கும்கி, கயல் என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை இயக்கிவர் பிரபு சாலமன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான தொடரி மற்றும் காடன் ஆகிய படங்கள் தோல்வியை தழுவின. இதையடுத்து ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பிரபு சாலமன் தற்போது ஹீரோ, ஹீரோயின் இன்றி ஒரு படத்தை இயக்கி உள்ளார்.

அப்படத்திற்கு செம்பி என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் கோவை சரளா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவரை காமெடி வேடங்களில் மட்டுமே நடித்துவந்த அவர், இப்படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுவரை பார்த்திராத புதிய வேடத்தில் அவர் நடித்துள்ளாராம்.

மேலும் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின்குமாரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு முன் இவர் நடிப்பில் வெளியான என்ன சொல்ல போகிறாய் படத்தின் ரிலீஸ் சமயத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அஸ்வினுக்கு, இப்படம் திருப்புமுனையாக அமையும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், செம்பி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டு உள்ளன. அதில் கோவை சரளாவின் மிரட்டலான லுக்கை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஜீவன் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... தனுஷ் உடனான பெட்ரூம் சீன் எத்தனை டேக் போச்சு?... வில்லங்கமான கேள்வி கேட்ட நெட்டிசனை விளாசிய மாளவிகா மோகனன்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?