
கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட முன்னணி நடிகரான புனீத் ராஜ்குமார் கடந்த செப்டம்பர் மாதம் 29-ந் தேதி அன்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருடைய மரணம் கன்னட திரையுலகை மட்டுமல்லாமல், கர்நாடக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 46 வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணத்தை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. பெங்களூரு காண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது தந்தையும் நடிகருமான ராஜ்குமார், தாயார் பர்வதம்மாள் ஆகியோரின் சமாதிகளுக்கு அருகே புனீத் ராஜ்குமாரின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நடிகர் புனீத் ராஜ்குமார் கடைசியாக நடித்த படம் ஜேம்ஸ். சேத்தன் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் புனீத் ராஜ்குமார், சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார். மேலும் பிரியா ஆனந்த், சரத் குமார், ஆதித்யா மேனன், ஷிவராஜ் குமார் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
புனீத் ராஜ்குமார் மறைவுக்கு பின் வெளியாக உள்ள கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இப்படம் வருகிற மார்ச் மாதம் 17-ந் தேதி புனீத் ராஜ்குமாரின் பிறந்தநாளன்று வெளியாக உள்ளது. இப்படம் வெளியாகும் தினத்திலிருந்து ஒரு வாரத்துக்கு வேறு எந்த கன்னட படமும் வெளியிடப்படக்கூடாது என கன்னட நடிகர் சங்கத்தினர் ஒருமனதாக முடிவெடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஜேம்ஸ் படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அசத்தலான ஆக்ஷன் காட்சிகள், மிரட்டலான பஞ்ச் வசனங்கள் என டீசர் முழுவதும் தன நடிப்பால் ரசிகர்களை அசர வைத்துள்ளார் புனீத் ராஜ்குமார். இத்தகைய திறமையான நடிகரை இனி திரையில் காண முடியாதே என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் கண்ணீர் சிந்துகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.