
லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவின் வேட்டை மன்னன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் (Nelson). அப்படம் சில பிரச்சனைகளால் ரிலீசாகாமல் முடங்கிப்போனது. இதையடுத்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை (Nayanthara) வைத்து அவர் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.
பின்னர் சிவகார்த்திகேயனுடன் இணைந்த நெல்சன். அவர் நடித்த டாக்டர் (Doctor) படத்தை இயக்கினார். இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் திரையரங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. மேலும் இப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸிலும் பட்டையை கிளப்பியது.
தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் (Beast) படத்தை இயக்கி உள்ளார் நெல்சன். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இயக்குனர் நெல்சன் இயக்கும் அடுத்தபடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி ரஜினியின் ‘தலைவர் 169’ (Thalaivar 169) படத்தை அவர் இயக்க உள்ளதாக அறிவித்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். விஜய், ரஜினி என அடுத்தடுத்து உச்ச நட்சத்திரங்களுடன் பணியாற்றும் வாய்ப்பை பெற்ற நெல்சனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில், பிக்பாஸ் சீசன் 5 (BiggBoss 5) நிகழ்ச்சியின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periyasamy), நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: வளர்ச்சி என்பது யாதெனில்” - அது நெல்சன் திலீப்குமார் தான்! மென்மேலும் வளர்க, வாழ்க நெல்சா என பாராட்டி பதிவிட்டுள்ளார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.