சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்... கடலுக்கடியில் பேனர் வைத்து அதகளம் செய்த ரசிகர்கள் - வைரல் வீடியோ

Published : Aug 05, 2022, 11:58 AM IST
சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்... கடலுக்கடியில் பேனர் வைத்து அதகளம் செய்த ரசிகர்கள் - வைரல் வீடியோ

சுருக்கம்

நடிகர் அஜித் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் கடலுக்கடியில் பேனர் வைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் எந்தவித பின்புலமும் இன்றி நுழைந்த நடிகர் அஜித், தனது தன்னம்பிக்கையாலும், விடா முயற்சியாலும் உயர்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இவருக்கென கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களை மகிழ்விக்கும் விதமாக சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார் அஜித்.

அமராவதி படம் மூலம் நாயகனாக அறிமுகமான அஜித்திற்கு ஆரம்ப காலகட்டத்தில் பவித்ரா, ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி என அடுத்தடுத்து ஹிட் படங்களாக அமைந்தன. அமர்க்களம் படத்தில் நடித்தபோது நடிகை ஷாலினி மீது காதல் வயப்பட்டார் அஜித். இப்படத்தை போல் இவர்களது காதலும் சக்சஸ் ஆனது. இதையடுத்து இவர்கள் இருவருக்கும் திருமணமானது.

இதையும் படியுங்கள்... லெஜண்ட் சரவணனுக்கு போட்டியாக சினிமாவில் அல்ட்ரா லெஜண்டாக களமிறங்குகிறாரா கிரண்குமார்? - அவரே சொன்ன ‘நச்’ பதில்

திருமணத்துக்கு பின்னர் ஷாலினி படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தாலும், அஜித் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் ஒரு நடிகராக மட்டுமின்றி கார் ரேஸர், பைக் ரேஸர், துப்பாக்கு சுடும் வீரர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார். தற்போது இவர் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதனைக் கொண்டாடும் விதமாக புதுச்சேரியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதன்படி கடலுக்கடியில் 100 அடி ஆளத்தில் நடிகர் அஜித்தின் பேனரை வைத்து கெத்து காட்டி உள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயன் யாருன்னே தெரியாது... வாய்விட்டு மாட்டிக்கொண்ட மிஷ்கின் - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்து..! அதிகாரப்பூர்வமாக அறிவித்த மந்தனா..! இதுதான் காரணம்!