பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது..எப்ப ரிலீஸ் தெரியுமா?

Published : Aug 05, 2022, 10:47 AM ISTUpdated : Aug 05, 2022, 11:03 AM IST
பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது..எப்ப ரிலீஸ் தெரியுமா?

சுருக்கம்

நட்சத்திரம் நகர்கிறது படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. வித்தியாசமான கதைகள் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகும் என பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா ரஞ்சித். இவரது இரண்டாவது படமான மெட்ராஸ் அரசியல் கதைகளத்தை மையமாகக் கொண்டு உருவாகி பாராட்டுகளையும் பெற்றது. கார்த்திக் நாயகனாக நடித்திருந்தார் இது விமர்சன ரீதியில் வெற்றி பெற்றது.

பின்னர் கபாலி படம் இவருக்கு மிகப்பெரிய டெர்னிங் பாயிண்டாக அமைந்தது.  சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரையில் ஆர்யாவை குத்து சண்டை வீரராக களம் இறக்கி இருந்தார் பா ரஞ்சித். இதற்கிடையே  மீண்டும் காலா படத்தில் ரஜினியுடன் இணைந்து இருந்த இவர் மும்பை தாதாவாக சூப்பர் ஸ்டாரை சித்தரித்து இருந்தார். அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, கால , சார்பட்டா பரம்பரை என எண்ணிலடங்கும் படங்களை மட்டுமே இவர் இயக்கி இருந்தாலும், ஒவ்வொரு படமும் சொல்லி அடித்திருந்தது.

மேலும் செய்திகளுக்கு...காருக்குள் கவர்ச்சி...மாமனிதன் நாயகியின் கண்கவரும் போஸ்கள்!

அதோடு இவர் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார் இவர் தனது நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலம் பரியேறும் பெருமாள் என்னும் படப்பை தயாரித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை கண்டது. இதையடுத்து இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, எழுத்தாளர், சேதுமான், ஜே பேபி உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார் .

தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது படம் உருவாகியுள்ளது. இதை அடுத்த விக்ரமின்  61வது படம் இயக்குவது குறித்த அறிவிப்பையும் வெளியிட்டு விட்டார். அதோடு கமல்ஹாசன் உடன் அரசியல் திரில்லர் படத்தையும் உருவாக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர்.

இந்நிலையில் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. வித்தியாசமான கதைகள் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகும் என பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் பா ரஞ்சித் இணைந்து தயாரித்துள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கான ஒளிப்பதிவை கிஷோர் குமார் மேற்கொண்டுள்ளார். இசை டென்மா, எடிட்டிங் செல்வம் ஆர்கே, கலை ரகு நடனம் சாண்டி, சண்டை பயிற்சி ஸ்டன்னர் ஷாம் உள்ளிட்டோர் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...சைக்கிள் சவாலுக்கு ரெடியான ஆர்யா... ஜெர்சியை வெளியிட்ட சூர்யா

இந்த படத்தின் மூலம் புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். இயக்குனர் ரஞ்சித் இயக்கியுள்ள இதில் காளிதாஸ்  ஜெயராம் நடிக்கிறார். இந்த படத்தில் நாயகியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.  இவர்களுடன் டான்சிங் ரோஸ் சபீர், கலையரசன் உட்பட பலர் நடித்துள்ளனர். தற்போது வெளியாகியுள்ள படத்தின் வெளியீடு குறித்து போஸ்டர் தன்பால் ஈர்ப்பாளர்களின் அடையாள கொடியின் வண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் நட்சத்திரம் நகர்கிறது  தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்த வாழ்க்கை கதையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?