
ஹிப்ஹாப் ஆதி தான் திரைப்பிரபலங்களில் முதல் ஆளாக ஜல்லிக்கட்டிற்காக குரல் கொடுத்தவர் என்பது அனைவர்க்கும் தெரியும்.
மேலும் ஜல்லிக்கட்டுக்காக ஒரு பாடலை பாடி அதன் மூலமும் ஜல்லிக்கட்டு நம் பாரம்பரிய விளையாட்டு இதை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது என்கிற ஒரு கருத்தையும் முன்வைத்தார்.
ஜல்லிக்கட்டுக்காக பின் தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த இளைஞர்களும் மாணவர்களும் மெரினா, வாடிவாசல், மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டிற்காக போராட்டம் தொடங்கி தொடர்ந்து 7 நாட்கள் அற வழியில் தங்களது கருத்தை முன் வைத்தனர்.
இப்படி அமைதியான முறையில் சென்ற போராட்டம் கடைசி நாளில், போலீசாரின் அராஜகத்தால் கலவரமாக மாறியது.
மேலும், ஆதி போராட்டத்தின் 6 வது நாள் பேசிய வாட்ஸ் ஆப்பிள் வெளிவந்த வீடியோ பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இதனால் பலர் அவர் விலை போகிவிட்டார் என்றெல்லாம் கூட பேசினார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆதியை ஜல்லிக்கட்டுக்காகப் போராடியவராக தெரிவித்து அதற்கு சான்றிதழ் ஒன்றையும் அளித்து கௌரவப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை உண்டாக்கியுள்ளது, போராட்டம் தன்னிச்சையாக தொடங்கியது, இவர் எப்படி மாணவர்கள் சார்பில் அதை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பலர் ஆதி துரோகம் செய்துவிட்டார் என கோபமாக பேசி சமூக வலைத்தளங்களில் கொதித்தெழுந்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.