ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அஜித்தால் வடிவேலுக்கு அடித்த ஜாக்பாட்...!!!

 
Published : Jan 28, 2017, 05:01 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அஜித்தால் வடிவேலுக்கு அடித்த ஜாக்பாட்...!!!

சுருக்கம்

அஜித் பொதுவாகவே  எல்லோருக்கும் மரியாதை கொடுத்து பேசுபவர். அதே நேரத்தில் தனக்கு ஒருவரிடம் மோதல் இருந்தால், எந்த காரணத்தை முன்னிட்டும் அவர் பக்கம் செல்லவே மாட்டார் என்பது திரையுலகை சேர்ந்த பலருக்கும் தெரியும்.

அப்படி ஒரு முறை அஜித்தும், வடிவேலுவும் இணைந்து நடித்த  ராஜா படத்தின் படப்பிடிப்பில் இருவருக்கும்  மனக்கசப்பு ஏற்பட்டது, அதன் பிறகு அஜித் எந்த ஒரு படத்திலும் வடிவேலுவை கமிட் செய்யவில்லை.

இந்நிலையில் , சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் வடிவேலுவை அஜித் சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

அந்த நேரத்தில் வடிவேலு நேராக வந்து அஜித்தின் கையை பிடித்து நலம் விசாரிக்க, அஜித்தும் அணைத்து கோபத்தையும் விட்டுவிட்டு   ‘எப்படி இருக்கீங்க வடிவேலு’ என்று  நலம் விசாரித்தார்.

நீண்ட நாட்களாக பேசாமல் இருந்தவர்கள் தற்போது பேச, இருவரும் நீண்டகாலம் கடந்து சென்ற சில நினைவுகளை நினைவு கூர்ந்துள்ளனர்.

மேலும் தற்போது வடிவேலு பெரிதும் எதிர்பார்த்த கத்திச்சண்டை படமும் தோல்வி அடைந்த நிலையை எல்லாம் அறிந்த அஜித் கவலை படாதீங்க வடிவேலு மிக விரைவில் இருவரும் இணைத்து ஒரு படம் நடிக்கலாம் என கூறியுள்ளாராம்.

இந்த தகவல் தற்போது வெளிவர இதனை கேள்வி பட்ட பலர் போராட்டத்தில் அஜித் மூலம் மீண்டும் வடிவேலுவுக்கு அதிர்ஷடம் நடித்துள்ளதாக கூறி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!