
Madhavan Owns New Iphone 15 : ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்திய ஐபோன் 15 சீரிஸ் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. காலை முதல் ஆப்பிளின் இந்த புதிய தயாரிப்பை வாங்க மக்கள் தயாராகி வந்த நிலையில், ஆப்பிள் ஸ்டோர்களில் மக்கள் கூட்டம் நிரம்பியுள்ளது என்று தான கூறவேண்டும். இந்நிலையில், நடிகரும், இயக்குனருமான ஆர் மாதவன் "மேட் இன் இந்தியா ஐபோன் 15" ஐ வாங்கியதில் பெருமைகொள்வதாக கூறியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் வாங்கியுள்ள புதிய பிங்க் நிற ஐபோன் 15ன் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதற்கு பல ட்விட்டர் பயனர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், சிலர் "சார் இது இந்தியாவில் Assemble செய்யப்பட்டது தான், ஆகவே நீங்கள் ரொம்பவும் பெருமைப்பட வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் செப்டம்பர் 15 அன்று இந்தியா உட்பட 40 கூடுதல் நாடுகளில் ப்ரீ ஆர்டருக்குக் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிறுவனத்தின் இணையதளத்தின்படி, இது இன்று முதல் முன்கூட்டிய ஆர்டர்களை அனுப்பத் தொடங்கும் என்பது நினைவுகூரத்தக்கது.
Apple iPhone 15 ஆனது புதிய 48MP கேமரா அமைப்பு, USB-C போர்ட், புதிய சிப்செட் உள்ளிட்ட பல வசதிகளுடன் அறிமுகமாகி உள்ளது. எனினும் அதன் விலை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அதன் முன்னோடியான Apple iPhone 14ஐப் போலவே உள்ளது. 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கூடிய Apple iPhone 15 இன் விலை இந்தியாவில் ரூ. 79,900 ஆகும், இருப்பினும் வாடிக்கையாளர்கள் முதல் நாளில் கூட ரூ.14000 வரை தள்ளுபடி பெறலாம். Apple iPhone 15 Plus-2ன் 256ஜிபி மாடல் மற்றும் 512ஜிபி மாடல் முறையே ரூ.89,900 மற்றும் ரூ.1,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிக்பாஸ் சுருதி பெரியசாமி லெஸ்பியனாக நடித்துள்ள.. 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' ட்ரைலர் வெளியானது!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.