தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் விஜயகுமார் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் விஜயகுமாரும் ஒருவர். 1961-ல் வெளியான ஸ்ரீ வள்ளி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார் விஜயகுமார். 1974-ல் வெளியான அவர் ஒரு தொடர்கதை படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். 70களில் முதன்மை கதாப்பாத்திரங்களிலும், கதாநாயகனகாவும் நடித்த விஜய்குமர் பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது வரை நடித்துக்கொண்டிருக்கும் விஜயகுமார் இதுவரை 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் விஜயகுமார் நடித்துள்ளார்.
நடிகர் விஜயகுமாருக்கு 2 மனைவிகள், அவர் 1969-ம் ஆண்டு முத்துக்கண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். முத்துக்கண்ணு – விஜயகுமாருக்கும் பிறந்த குழந்தைகள் தான் கவிதா விஜயகுமார், அனிதா விஜயகுமார், அருண் விஜய். இவர்களில் கவிதா விஜயகுமார், சர்தகுமாரின் கூலி படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருப்பார். அருண் விஜய்யும் பல படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில், தற்போது வில்லன் கேரக்டரிலும் மிரட்டி வருகிறார்.
undefined
விஜயகுமார் சக நடிகையான மஞ்சுளாவை 1976-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு பிறந்தவர்கள் வனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி ஆகியோர். இவர்கள் மூவரும் படங்களில் நடித்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்தது தான். படங்கள் மட்டுமின்றி வம்சம், நந்தினி உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் விஜயகுமாரின் சொந்த ஊர் பட்டுக்கோட்டை அருகில் உள்ள நாட்டுச்சாலை. அங்கு அவருக்கு சொந்தமான வீடு ஒன்று இருக்கிறது. அவ்வப்போது அங்கு போய் குடும்பத்துடன் தங்கி வருவது விஜயகுமாருக்கு பிடித்தமான விஷயம்..அந்த வீட்டை நடிகர் விஜயகுமார் சமீபத்தில் புதுப்பித்துள்ளார். அனைவரும் சென்று தங்கும் வகையில் மிகப்பெரிய வீடாக அது உள்ளது. இந்த வீட்டில் 10 பெட்ரூம் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த பிரம்மாண்ட வீட்டின் முகப்பில் விஜயகுமார் மற்றும் தனது முதல் மனைவி முத்துக்கண்ணு மற்றும் இரண்டாவது மனைவி மறைந்த மஞ்சுளாவிற்கு, சிலை அமைத்து இருக்கிறார். மேலும் தனது தாய், தந்தைக்கும் அவர் சிலை வைத்துள்ளார். நடிகர் அருண் விஜய் தனது ஒவ்வொரு படத்தின் ரிலீஸின் போதும், தாத்தா பாட்டி சிலை முன்பு பேனர் வைத்து வணங்கிவிட்டு தான் செல்வாராம்.