
பெங்களூருவில் வரும் டிசம்பர் 31 ஆம் தேதியன்று நள்ளிரவு நடைபெறவுள்ள புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க வரும் பாலிவுட் நடிகை சன்னிலியோனுக்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நீலப்படங்களில் நடித்து உலக அளவில் புகழ்பெற்றவர் நடிகை சன்னி லியோன். ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். நடிகர் ஜெய் நத்த வடகறி என்ற தமிழ்படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை சன்னி லியோன், தற்போது தமிழ்படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்து வருகிறது.
இந்நிலையில் சன்னி நைட் பெங்களூரு 2018-ம் என்ற பெயரில் புத்தாண்டு கொண்டாட்டம் வரும் 31 ஆம் தேதி நள்ளிரவு பெங்களூருவில் நடக்க உள்ளது. இதில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் பங்கேற்கிறார்.
இதற்கு கர்நாடக ரக்ஷனா வேதிகா சேனா அமைப்பு உள்பட பல்வேறு கன்னட அமைப்புகள் கடும் எதிர்த்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 15 மாவட்டங்களில் இந்த போராட்டம் பரவியுள்ளது.
பெங்களூருவுக்குள் சன்னிலியோனை நுழைய விடமாட்டோம் என முழக்கங்களை எழுப்பு அவரது படங்களை எரித்தனர்.
சன்னிலியோன் யார் ? அவர் வரலாறு என்ன ? என்பது எல்லோருக்கும் தெரியும் நமது கலாச்சாரத்தை சீரழித்த அந்த நடிகைக்கு பெங்களூருவில் அனுமதியில்லை என்று கர்நாடக ரக்ஷனா வேதிகா சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.