நவம்பர் 22ல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Oct 09, 2020, 11:44 AM IST
நவம்பர் 22ல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

சுருக்கம்

இதையடுத்து இன்று சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ஜெயச்சந்திரன் நவம்பர் 22ம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். 


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகித்து வந்த விஷால் தலைமையிலான அணியினரின் பதவிக்காலம் கடந்த 2019 ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளர் சேகரை தமிழக வணிகவரித்துறை நியமித்தது. தனி அதிகாரியின் நியமன உத்தரவை ரத்து செய்யக் கோரி விஷால் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது.

இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் தேர்தல் நடத்தக்கோரி தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜூன் 30க்குள் தேர்தலை நடத்த உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு  ஜூன் 21ம் தேதி தேர்தலை நடத்துவது என தனி அலுவலர் மற்றும் தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள்  தொடங்கப்பட்டன. 

எனினும் தற்போது நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட ஜூன் 30 என்ற காலக்கெடுவை நீக்க கோரி தயாரிப்பாளர் சங்கம் சார்பில், உயர்நீதி மன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடித்திருக்க வேண்டும், அதுதொடர்பான அறிக்கையையும் அக்டோபர் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

 

இதையும் படிங்க: ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலா?... ஓடிடியில் களைகட்டும் “க/பெ ரணசிங்கம்”...!

தற்போது வரை கொரோனா பிரச்சனைகள் நீடித்து வருவதால் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இதனால் தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 30ம் தேதியிலிருந்து நீட்டிக்கும் படி தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தரப்பு மீண்டும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.டி ஆஷா, டிசம்பர் 31-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமெனவும், சிறப்பு அதிகாரியான ஒய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தேர்தலை நடத்தி முடித்தது குறித்த அறிக்கையை ஜனவரி 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

 

இதையும் படிங்க: விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய நட்சத்திர தம்பதி... தாறுமாறு வைரலாகும் போட்டோ...!

இதையடுத்து இன்று சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ஜெயச்சந்திரன் நவம்பர் 22ம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். 2020 - 22ம் ஆண்டு தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் நவம்பர் 12ம் தேதி வெளியிடப்படும் என்றும், அடையாறு எம்.ஜி.ஆர் ஜானகி கலை கல்லூரியில் காலை 8மணி முதல் மாலை 4மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!