
பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்திக்கு இடையே சண்டை பற்றி கொண்டு, சுரேஷ் குக்கிங் டீமில் இருந்து விலகி தற்போது டாய்லெட் டீமுக்கு சென்று விட்டார். அவர் சமையல் அறையில் சனத்திடம் முட்டி கொண்டாலும், அனைவர் மத்தியிலும் அனிதா தான் சமையல் அணியை விட்டு தான் செல்ல காரணம் என கூறினார்.
இதானால் அனிதா, நேற்று நிஷா முன் அழுது... நான் என்ன பண்ணுன அவரை, என தன்னை நியாய படுத்தினார் என்பது அனைவரும் அறிந்தது தான்.
இந்நிலையில் இன்றைய முதல் புரோமோவிலேயே ரேகா மற்றும் சனம் ஆகியோர் இடையே நடக்கும் சண்டை தான் ஹை லைட்டாக காட்ட படுகிறது. தான் ஏற்று கொண்ட வேலையை நீங்கள் ஏன் செய்தீர்கள் என்பது தான் சனத்தின் பிரச்சனை. இவர்கள் பஞ்சாயத்தை தீர்த்து வைக்க இடையில் ரம்யாவும் தலையிடுகிறார்.
இதற்கு ரேகா, தான் உதவி செய்வதற்காக தான் இப்படி செய்தேன் என கூற... ரம்யா பாண்டியன் நீங்கள் இனி யாருக்குமே உதவ வேண்டாம் என கூறுகிறார். ஆனால், ரேகா நான் குக்கிங் டீமின் கேப்டன் என கூறுகிறார். இவர் பேசுவதை தாங்க முடியாமல் சனம் தலையில் அடித்து கொள்ளும் காட்சியும் காட்ட படுகிறது.
அந்த புரோமோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.