மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் தவித்த தயாரிப்பாளர் வி.ஏ. துரை.. ரஜினி, சூர்யா செய்த மிகப்பெரிய உதவி..

Published : Oct 03, 2023, 07:39 AM ISTUpdated : Oct 03, 2023, 09:28 AM IST
மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் தவித்த தயாரிப்பாளர் வி.ஏ. துரை.. ரஜினி, சூர்யா செய்த மிகப்பெரிய உதவி..

சுருக்கம்

ரஜினி, விஜயகாந்த், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களை துயாரித்துள்ளார். கு

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ துரை நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 69. ஆரம்பத்தில் ஏம்.எம். ரத்தினத்திடம் தயாரிப்பு நிர்வாகத்தில் பங்கெடுத்த இவர் பின்னர் எவர்கிரீன் இண்டர்நேஷனல் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இவர் ரஜினி, விஜயகாந்த், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களை துயாரித்துள்ளார். குறிப்பாக ரஜினியின் பாபா படத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளராக இருந்தார். மேலும் பிதாமகன், கஜேந்திரா, லூட்டி, லல்வி, விவரமானவன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த வி.ஏ துரைக்கு சர்க்கரை நோய் காரணமாக ஒரு கால் அகற்றப்பட்டது. அதன் பிறகு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..!

முன்னதாக நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள விஏ துரைக்கு உதவ வேண்டும் என்று அவர் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் வி.ஏ.துரை உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், கவனிக்க ஆள் இல்லாத நிலையில் தனது நண்பரின் வீட்டில் வசித்து வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் அவரது கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் துரைக்கு யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளரின் நண்பர் அந்த வீடியோவில் கூறியிருந்தார் .

இதையடுத்து நடிகர் ரஜினி, வி.ஏ துரையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதுடன், நான் பார்த்துக் கொள்கிறேன், கவலைப் பட வேண்டாம் என்று ஆறுதல் கூறி முழு மருத்துவ செலவையும் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா வி.ஏ.துரையின் ஆரம்ப சிகிச்சைக்காக அவருக்கு ரூ.2 லட்சம் வழங்கினார். இதே போல் நடிகர்கள் விக்ரம், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோரும் வி.ஏ. துரையின் மருத்துவ சிகிச்சை உதவி செய்தனர்.

பாலா இயக்கிய சூர்யாவின் பிளாக்பஸ்டர் திரைப்படமான பிதாமகன் படத்தை விஏ துரை தயாரித்தார். இப்படத்தில் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா ஆகியோர் நடித்துள்ளனர். 2003ல் வெளியான பிதாமகன், தமிழில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தேசிய விருது, பிலிம்பேர் விருது மற்றும் பலவற்றையும் இப்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் சிங்கநடை போட வரும் ரஜினி... படையப்பா 2 பற்றி ஹிண்ட் கொடுத்த சூப்பர்ஸ்டார்..!
கிரிஷ் மீது பாசமழை பொழியும் மனோஜ்... ரோகிணி ஹேப்பி; விஜயாவுக்கு ஏறும் பிபி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்