ஒரு வருடமாக கள்ளத்தனமாக செயல்படும் விஷால்! பிரபல தயாரிப்பாளர் ராஜன் பகீர் குற்றச்சாட்டு!

By manimegalai aFirst Published Jun 23, 2019, 2:55 PM IST
Highlights

நடிகர் விஷால் கடந்த ஒரு வருடமாக தேர்தல் பணியை கள்ள தனமாக செய்து வருவதாகவும், இதுபோன்ற ஒரு குழப்பமான தேர்தல் இந்திய அளவில் எப்போதும் நடந்தது இல்லை என பிரபல தயாரிப்பாளர் ராஜன் நடிகர் விஷால் மீது அடுக்கடுக்கான குற்றங்களை சுமற்றியுள்ளார்.
 

நடிகர் விஷால் கடந்த ஒரு வருடமாக தேர்தல் பணியை கள்ள தனமாக செய்து வருவதாகவும், இதுபோன்ற ஒரு குழப்பமான தேர்தல் இந்திய அளவில் எப்போதும் நடந்தது இல்லை என பிரபல தயாரிப்பாளர் ராஜன் நடிகர் விஷால் மீது அடுக்கடுக்கான குற்றங்களை சுமற்றியுள்ளார்.

நடிகர் சங்க தேர்தல், இன்று நடக்குமா? நடக்காத என மிக பெரிய குழப்பம் நடிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், சென்னை உயர் நீதி மன்றம், பதிவாளர் போட்ட தடையை நீக்கியதை தொடர்ந்து, இன்று தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை சென்னை மைலாப்பூரில் உள்ள எப்பாஸ் பள்ளியில் காலை 7  மணிக்கு துவங்கிய நடிகர் சங்க தேர்தல், மாலை 5  மணிவரை நடக்கிறது. இதில் பல முன்னணி நடிகர்கள், நாடக நடிகர்கள் என அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று வாக்களித்து வருகிறார்கள்.

பாண்டவர் அணியின் செயல்பாடுகள் குறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் ராஜன். விஷால் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் தேர்தல் அதிகாரியாக செயல்படும், நீதிபதி பத்மநாபன் விஷால் அணிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.

அதேபோல் விஷால் ஆயிரம் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாக கூறுவது தவறான கருத்து என்றும், வெளியூர்களில் உள்ள நாடக நடிகர்களுக்கு தபால் ஓட்டுக்கு கிடைக்கவில்லை என்பதற்காக, அவர்கள் நேரடியாக சென்னைக்கு வந்து ஓட்டு போட முயன்றனர் என்பதை சுட்டி காட்டினார். 

நடிகர் விஷால், ஒரு வருடமாகவே தேர்தல் பணியை கள்ள தனமாக செய்து வருகிறார். அவருக்கு தேவையானவர்களை இணைக்க, பலரை காரணமில்லாமல் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி உள்ளார். இதுபோன்ற ஒரு குழப்பமான தேர்தல் இந்திய அளவில் எப்போதும் நடந்தது இல்லை என தயாரிப்பாளர் ராஜன் கூறியுள்ளார்.

click me!