
நடந்து வரும் இந்த நடிகர் சங்கத் தேர்தலிலும் விஷால் அணி வெற்றிபெற்றுவிடுமோ என்ற எண்ணத்தில்,’இப்படியொரு குழப்பமான தேர்தல் நடிகர் சங்க வரலாற்றில் மட்டுமல்ல. தமிழக இந்திய வரலாற்றில் கூட நடந்த்யதில்லை’என்று புலம்பித்தள்ளியிருக்கிறார் பாக்யராஜ் அணி சார்பாக செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் தயாரிப்பாளர் கே.ராஜன்.
இதுகுறித்துப் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்,’இன்று நடைபெற்றுவரும் தேர்தலில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துகொண்டிருக்கின்றன. நாங்கள் எவ்வளவோ முறையிட்டும் தேர்தல் அதிகாரி ஒருதலைப்பட்சமாக விஷால்,நாசர் அணிக்கு ஆதரவாகவே செயல்படுகிறார். 1100 தபால் ஓட்டுக்கள் தங்களுக்குக் கிடைத்திருப்பதாக தேர்தல் நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பாகவே விஷால் சொல்லுகிறார். ஒரு தேர்தல் அதிகாரிக்கு மட்டுமே தெரிந்திருக்கவேண்டிய அந்த ரகசியம் விஷாலுக்குத் தெரிந்தது எப்படி?
நடிகர் சங்க நிர்வாகம் கையில் இருப்பதால் ஏகப்பட்ட கள்ளத்தங்கள் செய்துகொண்டு வந்திருக்கிறார். திடீரென்று 450 வாக்காளர்களை நீக்குகிறார். அடுத்து திடீரென்று இன்னொரு 450 வாக்காளர்களைச் சேர்க்கிறார். தேர்தல் ரத்து என மாவட்டப் பதிவாளர் அறிவித்த நிலையில் ராத்திரியோடு ராத்திரியாக நீதிபதியிடம் தேர்தல் நடத்த அனுமதி வாங்குகிறார். எந்த இடத்தில் தேர்தல் நடக்கிறது என்று உறுப்பினர்கள் தெரிந்துகொள்ளக்கூட அவகாசம் தராமல் இப்படி ஒரு அவசரம் எதற்கு?
எனக்குத் தெரிந்த வரையில் இவ்வளவு குழப்பமான தேர்தல் இதுவரை நடிகர் சங்க வரலாற்றில் மட்டுமல்ல, தமிழக, இந்திய அரசியல் வரலாற்ரிலும் கூட நடந்ததில்லை’என்று குமுறித் தீர்க்கிறார் கே.ராஜன்.உங்களுக்கு மட்டும் ரிசல்ட் தெரிஞ்சி போச்சா ராஜன் சார்?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.