புஸ்ஸி ஆனந்தை வச்சு அறிக்கை விடாதீங்க... மக்கள் ஏத்துக்கவே மாட்டாங்க - விஜய்க்கு கே.ராஜன் அட்வைஸ்

By Ganesh AFirst Published Feb 7, 2024, 1:45 PM IST
Highlights

மேடையில் இருந்துகொண்டு புஸ்ஸி ஆனந்தை அறிக்கை விடச் சொன்னால் மக்கள் விஜய்யை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தயாரிப்பாளர் கே.ராஜன் கூறி உள்ளார்.

சினிமா தயாரிப்பாளரான கே ராஜன், சென்னையில் நடைபெற்ற நினைவெல்லாம் நீயடா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்த கே.ராஜன், அவர் அரசியலில் சாதிக்க முக்கிய அட்வைஸ் ஒன்றையும் வழங்கி உள்ளார்.

அந்த விழாவில் கே.ராஜன் பேசியதாவது : “தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய்யை தமிழ் திரையுலகம் சார்பில் வாழ்த்துகிறேன். வெற்றிபெற வேண்டும் இல்லை முதலமைச்சர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு ஆரம்பித்தால் அதற்கென்று சில வழிகள் இருக்கின்றது. காட்சி ஆரம்பிச்சவங்க எல்லாம் காணாமல் போனதையும் பார்த்திருக்கிறோம். சினிமாவில் இருந்து வந்து புரட்சித்தலைவர் முதல்வர் ஆகிவிட்டார் என்று சொன்னால் அவரது அடிச்சுவடை கூட தொடுவதற்கு இன்றைக்கு ஆள் இல்லை.

எம்.ஜி.ஆர் முதலில் காங்கிரஸில் இருந்தார். பின்னர் திமுகவுக்கு வந்து கடுமையாக உழைத்தார். அப்போது மக்களை சந்திப்பதற்காக கிராமங்களுக்கு சென்றார். மக்களோடு மக்களாக வாழ்ந்ததோடு மட்டுமின்றி ஏழை மக்களுக்காக தன் வாழ்க்கையையும் அர்ப்பணித்தார் எம்.ஜி.ஆர். இதற்கு காரணம் அவர் சிறுவயதில் சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்பட்டார். அந்த கஷ்டத்தை ஏழைகள் படக்கூடாது என்பதற்காக அவர் பாடுபட்டார்.

இதையும் படியுங்கள்... விஜய்க்கு போட்டியாக அரசியலா? விஷாலின் திடீர் அறிக்கை சொல்வதென்ன?

அதேபோல் தம்பி விஜய்யும் வெற்றிபெற வேண்டும். ஆனால் எம்.ஜி.ஆர் செய்ததில் 20 சதவீதமாவது தொண்டு செய்ய வேண்டும். இறங்கி வந்து மக்களோடு மக்களாக பழக வேண்டும். மேடையில் இருந்துகொண்டு புஸ்ஸி ஆனந்தை அறிக்கை விடச் சொன்னால் மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இனி அப்படி இருக்க கூடாது. இது விஜய்யின் நல்லதுக்காகதான் சொல்கிறேன். தமிழ்நாட்டில் வரலாறு படைத்த கட்சிகள் நிறைய இருக்கு.

இதற்கிடையில் விஜய் புது கட்சி ஆரம்பித்துள்ளார். அது தப்பில்லை. இனி என்ன கொள்கை வகுக்க போகிறீர்கள். அதை மக்களிடம் எப்படி கொண்டுபோய் சேர்க்க போகிறீர்கள் என்பதை வைத்து மக்களின் ஆதரவை பெற்றால் நீங்கள் வெற்றி பெருவீர்கள் என அட்வைஸ் பண்ணிய கே ராஜன், விஜய் திருநெல்வேலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகள் வழங்கியதை குறிப்பிட்டு பாராட்டியும் உள்ளார். 

இதையும் படியுங்கள்...  Vijay Vs Vishal: பக்கா ஸ்கெச்! நேரடியா மோதி மூக்கு உடைத்தது தான் மிச்சம்! விஜய் பாணியில் பதுங்கி பாயும் விஷால்

click me!