
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடைபெற இருக்கிறது. தேர்தல் நடைபெறும் அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கான வேட்பாளர்களின் இறுதி பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது.
இதில் தலைவர் பதவிக்கு ஐந்து பேர் போட்டியிடுகின்றனர். கலைப்புலி ஜி.சேகரன், கோதண்டராமையா, ராதாகிருஷ்ணன், டி.சிவா மற்றும் விஷால் ஆகிய ஐந்து பேர் களத்தில் இருப்பதால் தலைவர் பதவிக்கு கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவர் பதவிக்கான வேட்பாளர் இறுதி பட்டியலை தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதால், வேட்பாளர்கள் தரப்பில் இருந்து விரைவில் அனல் பறக்கும் பிரச்சாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சங்கத்தை கைப்பற்றியது போல விஷால் தலைமையிலான இளைஞர்கள் அணி, தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.