
நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவருடைய வீட்டில் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றது.
இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றது என தெரிவித்துள்ளார். மேலும் கருணாஸிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீங்கள் ஒரு நல்ல நடிகன், உங்கள் காமெடிக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
அதனால் அரசியலில் நீங்கள் ஆர்வம் காட்டுவது போல சினிமாவிலும் தொடர்ந்து ஆர்வம் காட்ட வேண்டும் என தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தாராம்.
அதே போல தற்போது அரசியலில் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்தும் ரஜினிகாந்த் அவரிடம் விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது .
எந்திரன் படத்தில் ரஜினியுடன் கருணாஸ் இணைத்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.