Pathu Thala: வேற லெவல் எனர்ஜி சிம்புவின் 'பத்து தல' படம் எப்படி இருக்கு? முதல் ஆளாக விமர்சனம் கூறிய பிரபலம்!

By manimegalai a  |  First Published Mar 16, 2023, 10:23 PM IST

பிரபல தயாரிப்பாளர் தனஜெயன் பத்து தல படத்தை பார்த்துவிட்டு நடிகர் சிம்புவின் நடிப்பு குறித்து தன்னுடைய முதல் விமர்சனத்தை twitter மூலம் கூறியுள்ளது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செத்துள்ளது.
 


'மாநாடு' படத்தின் வெற்றிக்கு பின்னர், தொடர்ந்து தனித்துவமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் சிம்பு நடிப்பில், விரைவில் வெளியாக உள்ள 'பத்து தல' படம் குறித்து பிரபலம் ஒருவர் கூறியுள்ள விமர்சனம், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு' நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்குனர் கௌதமேனன் இயக்கத்தில் சிம்பு இணைந்து நடித்த இப்படத்தில், ஒரு கிராமத்தில் இருந்து மும்பைக்கு வரும் இளைஞன், எப்படி பல்வேறு பல்வேறு பிரச்சனைகளை கடந்து கேங்ஸ்டாராக உருவெடுக்கிறான் என்பதை பற்றி கூறி இருந்தது.இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல் பாகத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில்..  கூடிய விரைவில் இரண்டாவது பாகமும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

இட்ஸ் மை கஸ்டடி.. வெங்கட் பிரபு இயக்கத்தில்... நாக சைதன்யாவின் வெறித்தனமான நடிப்பில் வெளியான 'கஸ்டடி' டீசர்!

இந்த படத்தைத் தொடர்ந்து மீண்டும் எஸ் டி ஆர், கேங் ஸ்டர் அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் தான் 'பத்து தல'. மணல் மாஃபியாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், சிம்பு ஏ ஜி ஆர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே, சிம்பு ரசிகர்கள் இப்படத்தின் மீதான தங்களின் எதிர்பார்ப்பை சமூக வலைதளத்தில் அடிக்கடி வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கூறி உள்ள விமர்சனம் கண்டிப்பாக இப்படம் சூப்பர் ஹிட் வெற்றியடையும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

ஸ்கூல் படிக்கும் போதே தனுஷ் அப்படி.? டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் கூறிய வேற லெவல் தகவல்!

பிரபல தயாரிப்பாளர்  தனஜெகன், சிம்பு, கௌதம் கார்த்திக்,பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில்... இயக்குனர் ஒப்பிலி கிருஷ்ணா இயக்கத்தில் மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தை பார்த்த பின்னர், தன்னுடைய சமூக வலைதளத்தில் பத்து தல' படத்தில் எஸ் டி ஆர், பவர் ஃபுல் பெர்ஃபார்மன்சை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவருடைய எனர்ஜி, ஸ்கிரீன் ப்ரசன்ஸ்  நெருப்பு போன்று உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் கௌதம் கார்த்திக் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாக புகழ்ந்து தள்ளியுள்ளார். இப்படம் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை நிகழ்த்தும் என என கூறி, தன்னுடைய வாழ்த்துக்களை பட குழுவினர் அனைவருக்கும் கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது தீயாக பரவி வருகிறது.

பல லட்சம் மதிப்பில்.. திருமண மண்டபம் போல் பிரமாண்ட வீடு கட்டிய விஜய் டிவி தீனா! வைரலாகும் கிரஹ பிரவேச போட்டோஸ்

'பத்து தல' திரைப்படம் மார்ச் 30ம் தேதி வெளியாக உள்ள நிலையில்,  இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம்கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'முஃட்டி' படத்தின் ரிமேக்காக எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

is 's Rage & Powerful performance. He is on fire. Wow. What energy & screen presence 🔥🔥🔥 is in a solid role 👌👍

Congrats . The film is going to storm box office from 30th 🏆😇💪 pic.twitter.com/WqW8v2J6qk

— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang)

 

click me!