
இந்த வருடம் பிறந்து 3 மாதங்கள் முடிவதற்கு முன்பே அடுத்தடுத்து சில எதிர்பாராத மரணங்கள், திரையுலக பிரபலங்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது. குறிப்பாக சமீபத்தில் பிரபல காமெடி நடிகர் மயில் சாமி உயிரிழந்தார். இவரின் மறைவு தமிழ் திரையுலகையே கலங்க செய்த நிலையில் இவரை தொடர்ந்து பிரபல தயாரிப்பாளர் உயிரிழந்துள்ளார்.
இயக்குனர் இமயம் .பாரதிராஜாவின் தயாரிப்பு நிர்வாகியாக இருந்து, பாரதிராஜா இயக்கத்தில், சுகன்யா அறிமுகமான " புது நெல்லு புது நாத்து " படத்தின் தயாரிப்பாளர் சி.என்.ஜெய்குமார் உடல் நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் காலமானார். அவரது உடலுக்கு இன்று இயக்குனர் பாரதிராஜா, கண் கலங்கியபடி சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு , தயாரிப்பாளர்கள் சித்ராலட்சுமணன் , முரளி, நடிகர் மனோஜ் பாரதிராஜா மற்றும் திரைப்பட இயக்குனர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இவருடைய உடல் செனாய் நகரில் உள்ள, அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.