
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியாக நடித்து வரும் பிரியங்கா சோப்ரா, தன்னுடைய 38 வயதிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவின் மவுசு திருமணத்திற்கு பிறகும் கூட சரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து 2018ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார்.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர், நடிகை பிரியங்கா சோப்ரா, இன்ஸ்டாகிராமில் தனது பெயருக்கு பின்னால் இருந்த தனது கணவர் நிக் ஜோனசின் பெயரை நீக்கினார். இதையடுத்து, அவர் நிக் ஜோனசை விவாகரத்து செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவின.
ஏனெனில், அண்மையில், நடிகை சமந்தா தன்னுடைய கணவர் நாகசைதன்யாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது, அதனை சூசகமாக தெரிவிக்கும் விதமாக, சமூக வலைதள பக்கத்தில் தனது பெயரின் பின்னால் இருந்த தன்னுடைய கணவரின் பெயரை தான் முதலில் நீக்கினார். பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
தற்போது பிரியங்கா சோப்ராவும் அவ்வாறு பெயரை நீக்கியதால், விவாகரத்து சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், அந்த சர்ச்சைகளுக்கெல்லாம் ஒரு புகைப்படத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரியங்கா சோப்ரா. கணவரை கட்டிப்பிடித்தபடி முத்தம் கொடுக்க ரெடியாக இருந்த சமயத்தில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விவாகரத்து சர்ச்சைகளை தவிடுபொடி ஆக்கி உள்ளார் பிரியங்கா சோப்ரா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.