
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடன இயக்குனராக வலம் வந்தவர் சிவசங்கர் மாஸ்டர். 800க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்த இவர் தமிழ் திரையுலகிலும் ரஜினி, அஜித், தனுஷ் போன்ற முன்னணி பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார்.
மேலும் பல தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்தும் உள்ளார். சமீபத்தில் கூட தமிழில், சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் விஜய்யின் ‘சர்கார்’ போன்ற படங்களில் நடித்திருந்தார்.
தேசிய விருது, தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது என பல்வேறு விருதுகளை வென்றுள்ள இவர், அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரின் மருத்துவ செலவுக்கு பணமில்லாத காரணத்தால், தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு, சிவசங்கர் மாஸ்டரின் மகன் அஜய் கிருஷ்ணா சமூக வலைதளம் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து திரைப்பிரபலங்கள் சிலர் உதவ முன்வந்துள்ளனர். அதன்படி பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட், சிவசங்கர் மாஸ்டருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்வேன் என்று உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், தற்போது சிவசங்கர் மாஸ்டருக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளார். அவர் சிவசங்கர் மாஸ்டரின் மருத்துவ செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் நடித்த ‘திருடா திருடி’ படத்தில் இடம்பெற்ற வைரல் ஹிட் பாடலான ‘மன்மதராசா’ பாடலுக்கு சிவசங்கர் மாஸ்டர் தான் நடனம் அமைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.