
'ஜோக்கர்' படத்தின் மூலமாக தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ரம்யா பாண்டியன், இந்த படத்தை தொடர்ந்து நடித்த ஆண் தேவதை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சர்யப்படுத்தினார்.
தொடர்ந்து இதே போன்ற கதைக்களம் அமைந்ததால், இந்த இமேஜை மாற்றும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் மனதில் கனவுக்கன்னியாக வலம் வந்தார்.
இதையடுத்து விஜய் டிவி, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற ரம்யா பாண்டியன், 'கலக்க போவது யாரு' நடுவராகவும் மாறினார்.
பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ரம்யா பாண்டியனுக்கு, அதன்பின் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.
அண்மையில் சூர்யா தயாரித்த ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்திய ரம்யா பாண்டியன். தற்போது மேலும் ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளார். அதன்படி அவர் அடுத்ததாக பிரபல மலையாள நடிகர் மம்முட்டி ஹீரோவாக நடிக்கும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மம்முட்டி, தமிழிலும் மணிரத்னம் இயக்கிய தளபதி, லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் உள்பட பல்வேறு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளதால் ‘நண்பகல் நேரத்து மயக்கம்' படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் எடுக்கின்றனர்.
இப்படத்தை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்குகிறார். இவர் மலையாளத்தில் ஆமென், அங்கமாலி டைரிஸ், ஜல்லிகட்டு போன்ற ஹிட் படங்களை இயக்கியவர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பழனியில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகை ரம்யா பாண்டியன் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.