பிறந்து 100 நாட்களுக்கு மேல் ஐசியூ-வில் சிகிச்சை! மகளின் புகைப்படத்தை வெளியிட்டு பிரியங்கா சோப்ரா உருக்கம்

Published : May 09, 2022, 11:05 AM IST
பிறந்து 100 நாட்களுக்கு மேல் ஐசியூ-வில் சிகிச்சை! மகளின் புகைப்படத்தை வெளியிட்டு பிரியங்கா சோப்ரா உருக்கம்

சுருக்கம்

Priyanka chopra : குழந்தை பிறந்து 100 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், முதன்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, அக்குழந்தை குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரியங்கா சோப்ரா. இவர் கடந்த 2018-ம் ஆண்டு பிரபல பாடகரான நிக் ஜோனாசை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாடகைத் தாய் மூலம் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார்.

பெண் குழந்தையை பெற்றெடுத்த பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ் தம்பதிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்தன. ஆனால் அவர் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்து வந்தனர். இந்நிலையில், குழந்தை பிறந்து 100 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், முதன்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, அக்குழந்தை குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ளதாவது : “ரோலர் கோஸ்டர் அனுபவத்தை போன்று, கடந்த சில மாதங்களாக நாங்கள் எதிர்கொண்ட சிலவற்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பிறந்து 100 நாட்களுக்கு மேல் ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வந்த எங்களது குழந்தை தற்போது வீட்டுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் பயணமும் தனித்துவமானது. எங்களுக்கும் கடந்த சில மாதங்கள் சவால்கள் நிறைந்ததாக இருந்தது.

எங்கள் குழந்தை வீட்டுக்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தருணத்தில் அவளுக்கு சிகிச்சை அளித்த அனைத்து டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அம்மா, அப்பாவாக எங்களது புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது. என்னை அம்மா ஆக்கிய நிக் ஜோனாஸுக்கு எனது நன்றி, லவ் யூ” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... Atlee : அட்லீயை பங்கமாக கலாய்த்து டுவிட் போட்ட பிரபல இயக்குனர்... என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!