
நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பின் கணவர் நிக்ஜோன்ஸுடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டு, கணவருக்கும், தனக்கும் உள்ள நெருக்கத்தை உறுதி செய்து வருகிறார்.
திருமணமான மூன்று மாதத்திலே இவர்கள் விவாகரத்து பெற உள்ளதாக வெளியான செய்திக்கு பின் கணவர் நிக்ஜோன்ஸுடன் நிறைய நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் பிரியங்கா. சமீபத்தில் கூட, அமெரிக்காவில் நடந்த 'Metgala' 2019 நிகழ்ச்சியில் வித்தியாசமான ஆடை அலங்காரத்துடன் தம்பதிகளாக கலந்து கொண்டு கலக்கினார்.
இந்நிலையில், தற்போது பிரியங்கா சோப்ரா நேற்று மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து, கணவருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது .. திருமணத்திற்கு பிறகும் இது போன்ற மிகவும் கவர்ச்சியான உடை தேவையா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
நெட்டிசன்கள் கூறுவது போல்... திருமணத்திற்கு பின்பு தான், ப்ரியங்கா சோப்ராவும் ஓவர் கவர்ச்சியில் உடை அணிந்து வருகிறார் என்பது சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.