‘சரித்திர, பூகோள உண்மைகள் தாமதமாகப் புரிந்துகொள்ளப்பட்டதைப் போல் கமல் பேசிய உண்மைகளையும் மக்கள் தாமதமாகப் புரிந்துகொள்வார்கள். அப்போது தமிழகத்தின் செங்கோல் கமல் கைக்கு வரும்’ என்று கூறுகிறார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன்.
‘சரித்திர, பூகோள உண்மைகள் தாமதமாகப் புரிந்துகொள்ளப்பட்டதைப் போல் கமல் பேசிய உண்மைகளையும் மக்கள் தாமதமாகப் புரிந்துகொள்வார்கள். அப்போது தமிழகத்தின் செங்கோல் கமல் கைக்கு வரும்’ என்று கூறுகிறார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன்.
நேற்று நடந்த தனது ‘ஒத்தச் செருப்பு’ படவிழாவில் பேசிய பார்த்திபன்,”ஷங்கர் படம் என்றாலே அது ஸ்பெஷலா இருக்கும். சமீபத்தில் அவருக்காக 25-வது ஆண்டு விழா எடுத்தோம். மிஷ்கினுடைய சின்ன ரூம் அது. அங்கு நான் பேச வேண்டும் என்று அனைவரும் நினைத்தார்கள். ஆனால், அந்த சின்ன ரூமில் மணிரத்னம், கவுதம் மேனன், உள்ளிட்ட பல இயக்குநர்கள் அங்கே இருந்தார்கள். மணிரத்னம் மைக்கை கேட்டு வாங்கி மனதில் பட்டதை பேசினார். அது ஷங்கர் படத்தை விட பிரமாண்டமான தருணம்.
இயக்குநர் பாக்யராஜைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது இப்படியொரு மேடையில் நான் நிற்பதற்கு அவர்தான் காரணம். விஜய், அஜித், கமல்ஹாசன் இவர்களுடைய படங்களெல்லாம் தனியாகவே பேசப்படும். ஆனால் நான் கஷ்டப்பட்டு ஏதேனும் செய்தால் தான் அந்த கேமிற்குள்ளேயே செல்ல முடியும். கடந்த 15 வருடங்களாக இந்தத் திரைக்கதை எனக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. இப்போது அது படமாகியிருக்கிறது.40 வருடங்களுக்கு முன்பே கமல்ஹாசன் இப்படி ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். இந்தக் கதையை அவர் எனக்காகவே விட்டு வைத்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.நான் கமல்ஹாசனின் தீவிரமான ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். சமீபத்தில் ஓட்டு போட கிளம்பும்போது கூட கமலுக்குத்தானே வாக்களித்தீர்கள்? என்று கேட்டார்கள்.
கமல்ஹாசனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஓடி வந்து கதாநாயகியின் உதட்டைக் கடித்தால் அது கமல்ஹாசன். ஓடி வந்து தனது உதட்டை தானே கடித்தால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இப்படி நான் சொல்லவில்லை இது வாட்ஸ் அப்பில் படித்தது. எனக்கு பிடித்திருந்தது.
தமிழக அரசியலைப் பொறுத்தமட்டில் கமலின் அருமையைப் புரிந்துகொள்ள இன்னும் சில காலம் ஆகலாம். சரித்திர பூகோள உண்மைகளை, பூமி உருண்டை என்கிற உண்மையைக் கூட உடனுக்குடன் ஒத்துக்கொள்ளாதவர்கள் நாம். கமலின் இன்றைய பேச்சுக்களும் அப்படித்தான் காலம் தாழ்த்தி தாமதமாகப் புரிந்துகொள்ளப்படும். அப்போது தமிழகத்தின் செங்கோல் கமலின் கையில் இருக்கும்’ என்று பேசினார்.