ஆக்ஷன் காட்சியில் நடிக்கும் போது... காயமடைந்த பிரியங்கா சோப்ரா..! வைரலாகும் புகைப்படம்..!

Published : Aug 29, 2021, 04:55 PM IST
ஆக்ஷன் காட்சியில் நடிக்கும் போது... காயமடைந்த பிரியங்கா சோப்ரா..! வைரலாகும் புகைப்படம்..!

சுருக்கம்

’சிட்டாடல்’ என்ற வெப்தொடரில் நடிப்பதற்காக லண்டன் சென்றுள்ள பிரியங்கா சோப்ரா அதிரடி காட்சிகளை மேற்கொள்ளும் போது தான், இப்படி அடிபட்டதாக கூறப்படுகிறது. 

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை நடித்து வரும் பிரியங்கா சோப்ரா. தன்னுடைய 38 வயதிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவின் மவுசு திருமணத்திற்கு பிறகும் கூட சரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து 2018ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். 

திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி காட்டுவதில் குறைவைக்காத பிரியங்கா சோப்ரா, கணவருடன் பதிவிடும் ரொமாண்டிக் போட்டோக்களில் கூட கவர்ச்சி  உடையில் தோன்றி மிரள வைக்கிறார். அதனால் தானோ என்னவோ பிரியங்கா சோப்ராவிற்கான மவுசு நாளுக்கு நாள் கூடி கொண்டே செல்கிறது.

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா, ரத்த காயத்துடன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ’சிட்டாடல்’ என்ற வெப்தொடரில் நடிப்பதற்காக லண்டன் சென்றுள்ள பிரியங்கா சோப்ரா அதிரடி காட்சிகளை மேற்கொள்ளும் போது தான், இப்படி அடிபட்டதாக கூறப்படுகிறது. மேலும் சில ரசிகர்கள் இது? உண்மையா என்பது போல் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பிரியங்கா சோப்ரா பதிலளித்துள்ளார்.

தனக்கு படப்பிடிப்பில் காயம் பட்டது உண்மைதான் என்றும், ஆனால் பலரும் நினைப்பது போல் புருவத்தில் காயம் ஏற்படவில்லை, கன்னத்தில் தான் காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இவரது ரசிகர்கள் ஆக்ஷன் காட்சியில் ஈடுபடும் போது, கவனமாக இருக்கும்படி பிரியங்கா சோப்ராவிடம் தெரிவித்து வருகிறார்கள். இந்த புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!