வீட்டில் போதை பொருள் வைத்திருந்த பிரபல நடிகர் அதிரடி கைது! அதிர்ச்சியில் திரையுலகினர்!

Published : Aug 29, 2021, 03:02 PM IST
வீட்டில் போதை பொருள் வைத்திருந்த பிரபல நடிகர் அதிரடி கைது! அதிர்ச்சியில் திரையுலகினர்!

சுருக்கம்

போதை பொருள் வைத்திருப்பதாக, முன்பை என்சிபி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில், சனிக்கிழமை மாலை புறநகர் அந்தேரியில் உள்ள அர்மானின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகர் ஆர்மன் கோலியை போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் (என்சிபி) நேற்று சனிக்கிழமை அன்று கைது செய்தது. இந்நிலையில் நகர நீதிமன்றத்தின் முன் படுத்தப்பட்ட பட்டதாக தெரிவித்துள்ள (என்சிபி) அதிகாரிகள், போதை மருந்து மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ்,  21 (a), 27 (a), 28, 29, 30, மற்றும் 35 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சல்மான் கான், உள்ளிட்ட பிரபல நடிகர்களின் பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமான அர்மான் கோலி, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர். இந்நிலையில் இவர் போதை பொருள் வைத்திருப்பதாக, முன்பை என்சிபி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில், சனிக்கிழமை மாலை புறநகர் அந்தேரியில் உள்ள அர்மானின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது தடை செய்யப்பட்ட போதை பொருள்களில் ஒன்றான கோகென், போதைப்பொருள் மிக சிறிய அளவில் மீட்கப்பட்டுள்ளது.  இது இந்த நாட்டை சேர்ந்த போதை பொருள் இல்லை என்பதால், வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்படுகிறதா? என்கிற கோணத்தில் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். 

"ரெய்டுக்குப் பிறகு, நடிகர் அர்மான் கோலி என்சிபி கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். பின்னர் அவர் என்சிபி அலுவலகத்தில் விசாரணைக்காக காவலில் வைக்க பட்டதாக"  என்சிபி மண்டல இயக்குனர் (மும்பை) சமீர் வான்கடே தெரிவித்தார்.

தற்போது நடிகர் அர்மான் கோலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு தங்களுக்கு முன்பு தான் தான் போதை மருந்து வழக்கில் தொடர்புடைய பிரபலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?