
பிரபல போஜ்புரி நடிகை ஒருவரின் அந்தரங்க வீடியோ என ஒரு வீடியோ... சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என கதறியபடி விளக்கம் கொடுத்துள்ளார்.
கடந்த ஒரு வார காலமாகவே பிரபல போஜ்புரி நடிகை பிரியங்கா பண்டித் என்பவரை போலவே இருக்கும் பெண் ஒருவரின் அந்தரங்க வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் கசிந்தது. அந்த வீடியோ குறித்து நடிகைக்கு தெரிய வந்ததும், இதுகுறித்து உடனடியாக போலீசிலும் புகார் கொடுத்த நிலையில், வீடியோவை முடக்குவதற்குள் பலர் அந்த வீடியோவை பார்த்து விட்டனர். எனவே தன்னுடைய ரசிகர்கள் இந்த வீடியோவை பார்க்கவேண்டாம் தவிர்த்து விடவும் என பிரியங்கா பண்டித் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆனால் தற்போது அந்த வீடியோவில் சில மர்மநபர்கள் பிரியங்கா பண்டித் பெயரை போட்டு வெளியிடுட்டுள்ளதால், மீண்டும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை. அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை, என்னை போலவே இருக்கும் வேறு ஒரு பெண் என கூறியுள்ளார். மேலும் தன்னுடைய வளர்ச்சி பிடிக்காதவர்கள் மற்றும் தன்னை பழி வாங்குவதற்கு சிலர் இதுபோன்ற சதி வேளைகளில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.
ஆனால் தற்போது இந்த வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வீடியோ குறித்து வெளியாகியுள்ள தகவலில், இது சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இல்லை என்றும், மிகவும் பழமையானது என கூறப்படுகிறது. பிரியங்கா பண்டித்தின் ஆதங்கத்தை புரிந்து கொண்ட அவரது ரசிகர்கள் சிலர், சமூக வலைத்தளம் மூலம் தொடர்ந்து அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.