'வீரமே வாகை சூடும்' விஷாலின் வெறித்தனமான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

By manimegalai aFirst Published Aug 29, 2021, 12:09 PM IST
Highlights

நடிகர் விஷால் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவருடைய 31 ஆவது படத்தின் ஆக்ஷன் படமாக எடுக்கப்பட்டு வரும், படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
 

நடிகர் விஷால் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவருடைய 31 ஆவது படத்தின் ஆக்ஷன் படமாக எடுக்கப்பட்டு வரும், படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் அடுத்தடுத்து ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படங்களிலேயே நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில்,  'எனிமி' மற்றும் 'துப்பறிவாளன் 2 ' என இரண்டு ஆக்ஷன் படங்களை தன் கையில் வைத்துள்ள விஷால், தன்னுடைய 31 ஆவது படத்தை, அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் என்பவர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத்தில் உள்ள, ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. அப்போது ஆக்ஷன் காட்சிகளை தத்ரூபமாக படமாக்க பல்வேறு ரிஸ்க் எடுத்து விஷால் நடித்திருந்தார். இதுகுறித்த காட்சிகள் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. மேலும் விஷாலுக்கும் சில லேசான அடிகள் எடுப்பட்டது. பின்னர் 'எனிமி' படத்தின் பணிக்காக சிறு இடைவெளி விட்ட விஷால் மீண்டும் இந்த படத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று விஷாலின் 44 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், சற்று முன்னர் விஷாலின் மிரட்டல் தோற்றத்துடன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும், இந்த படத்தின் பெயர் 'வீரமே வாகை சூடும்' என்பதையும் படக்குழு அறிவித்துள்ளது. 

Here We Go,

Presenting the First Look & Title of - pic.twitter.com/m6R4Q4HOM9

— Vishal (@VishalKOfficial)

click me!