நடிகை மஹிமா நம்பியாருக்கு கிடைத்த விருது..! குவியும் பிரபலங்கள் வாழ்த்து..!

Published : Aug 29, 2021, 03:59 PM IST
நடிகை மஹிமா நம்பியாருக்கு கிடைத்த விருது..! குவியும் பிரபலங்கள் வாழ்த்து..!

சுருக்கம்

நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான 'மகாமுனி' படம் மாட்ரிட் சர்வதேச விருது விழாவில் கலந்து கொண்ட நிலையில், 5 விருதுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டதோடு, சிறந்த துணை நடிகைக்கான விருதையும் வென்றுள்ளது.   

நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான 'மகாமுனி' படம் மாட்ரிட் சர்வதேச விருது விழாவில் கலந்து கொண்ட நிலையில், 5 விருதுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டதோடு, சிறந்த துணை நடிகைக்கான விருதையும் வென்றுள்ளது. 

இயக்குனர் சாந்தகுமார், இயக்கத்தில் வெளியாகி ஆர்யாவுக்கு  மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்த திரைப்படம் 'மகாமுனி'. ஆர்யா முதல் இந்த படத்தில் நடித்திருந்த அனைவருமே தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் இந்த படத்திற்கு மாட்ரிட் சர்வதேச விழாவில் விருது கிடைத்துள்ளதற்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவருமே தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது சிறந்த துணை நடிகைக்கான விருது, நடிகை மஹிமா நம்பியாருக்கு கிடைத்துள்ளது. இப்படத்தில் தீபா என்கிற கதாபாத்திரத்தில் மஹிமா, தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் இன்னும் 'மகாமுனி' திரைப்படம் 5 விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மஹிமா நம்பியாருக்கு துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்ட பின்னர் இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு பெற்ற ’மகாமுனி’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருது கிடைத்தது அறிந்து எனக்கு வார்த்தையே வரவில்லை என தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது மிகப்பெரிய சந்தோசமாக என்றும், நான் முதலில் இயக்குனர் சாந்தகுமார் அவர்களுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து மகிமா நம்பியாருக்கு திரியுலகை சேர்ந்த ஆர்யா உள்ளிட்ட பல பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Actress Sreeleela : 'ஆண்கள் மேல ஆசை இல்லை' நடிகை ஸ்ரீலீலா ஓபன் டாக்! ஷாக்கிங் காரணம்
கான்ஜூரிங்கை மிஞ்சும் பயங்கரமான 5 திகில் படங்கள்!!