தற்கொலை செய்ய காரணம் இது தான்... மனம் திறந்த நடிகை பிரியா...

 
Published : May 13, 2017, 03:51 PM ISTUpdated : Sep 19, 2018, 03:17 AM IST
தற்கொலை செய்ய காரணம் இது தான்... மனம் திறந்த நடிகை பிரியா...

சுருக்கம்

priya open talk with serial actors sucide

பிரபல தனியார் தொலைக்காட்சியில், செய்தி வாசிப்பாளராக இருந்து பின்  சின்னத்திரை சீரியல் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர் நடிகை பிரியா. இவர் சமீப காலமாக சீரியலில் நடிப்பதை தவிர்த்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது அதிக அளவில் அரங்கேறி வரும் சின்னத்திரை  பிரபலங்கள் தற்கொலை குறித்து இவர் மனம் திறந்து பேசியுள்ளார். 

இதில் பொதுவாக சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் வேலை குறித்து அவர்களுடைய வீட்டில் மனம் திறந்து பேசுவது இல்லை என்றும்,   ஆனால் அப்படி இருக்காமல் அவர்கள் தங்களுடைய வேலை குறித்து வீட்டில்,  மறைக்காமல் கூறவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அப்படி நடந்துக் கொண்டால் குடுபத்திற்குள் எந்த ஒரு பிரச்சனைகளுமே வராது. வேலை காரணமாக அவர்கள்  இரவு வீட்டிற்கு தாமதமாக வந்தாலும், நமக்கென்ற ஒரு மரியாதை கொடுத்தால் எந்தவித பிரச்சனைகளும் ஏற்படாது.

மேலும், சகிப்புத்தன்மை, பொறுமை இல்லாதவர்களே தற்கொலை முடிவை எடுக்கின்றனர், எந்த ஒரு பிரச்சனை என்றாலும் எதிர்த்து போராட வேண்டும்.

அதே போல தங்களுக்கு எதாவது பிரச்சனைகள் இருந்தால், அது பற்றி குடும்பத்தினரிடமோ, அல்லது நண்பர்களிடமோ பேசி தெளிவான முடிவையே எடுக்க வேண்டும் என பிரியா கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!
2025-ல் பாக்ஸ் ஆபிஸ் குயின் யார்? அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 5 ஹீரோயின்ஸ் இதோ