நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு அடித்த ஜாக்பாட்!

Published : Jul 13, 2021, 11:17 AM IST
நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு அடித்த ஜாக்பாட்!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து, நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக, பிரியா பவானி ஷங்கர் நடிக்க உள்ளது, இவருக்கு கிடைத்த ஜாக்பார்ட் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.  

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து, நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக, பிரியா பவானி ஷங்கர் நடிக்க உள்ளது, இவருக்கு கிடைத்த ஜாக்பார்ட் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்: ஸ்ரீதேவி மகளா இப்படி?உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் ஓவர் டைட் ஸ்கின் கலர் உடையில் ஜான்வி கபூரின் அட்ராசிட்டி!
 

2017 ஆம் ஆண்டு 'மேயாத மான்' படத்தின் மூலம் தன்னுடைய வெள்ளித்திரை பயணத்தை துவங்கிய, பிரியா பவானி ஷங்கர்... ஒரு வருடத்திற்கு ஒரு படம் என சிறப்பான படங்களாகவே தேர்வு செய்து நடித்து வந்தார். ஆனால் இந்த 2021 - ல் மட்டும் இவரது கைவசம் சுமார் 10 படங்கள் உள்ளது. 'கசட தபற', 'குருதியாட்டம்', 'ஓ மணப்பெண்ணே', 'ஹாஸ்டல்', 'ருத்ரன்', 'இந்தியன் 2 ' , '10 தல' , என புதிய படங்களில் கமிட் ஆகிக்கொண்டே செல்கிறார். இவரது இந்த அசுர வளர்ச்சி பல இளம் நடிகைகளை பிரமிக்க வைத்துள்ளது என்றும் கூறலாம்.

அடுத்தடுத்து இந்த படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள உள்ள பிரியா பவானி ஷங்கர், தற்போது ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப கதைகளை கவனமாக தேர்வு செய்து நடித்து வரும் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே நடிகர் கார்த்தி நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில், பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்தாலும் ஹீரோயினாக நடிக்க வில்லை. ஆனால் சமீப காலமாக லாரன்ஸ், சிம்பு, ஜெயம் ரவி போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்களிலும் நடிக்க துவங்கி விட்டார் பிரியா பவானி ஷங்கர்.

மேலும் செய்திகள்: அல்ட்ரா மாடர்ன் ட்ரெஸ்ஸில்... கடற்கன்னியாய் மாறி கடற்கரையை சூடேற்றும் ஷிவானி! ஹாட் போட்டோஸ்!
 

இந்த படத்தை, ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து 'பூலோகம்' படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்க உள்ளதாகவும், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக இப்படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் பிரியா பவானிக்கு பலர் தங்களுடைய ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடிகைகளை பார்த்ததும் ஈ போல் மொய்க்கும் ரசிகர்கள்... நிதி அகர்வாலை தொடர்ந்து சமந்தாவுக்கும் இந்த நிலைமையா?
கிறிஸ்துமஸ் விருந்தாக இந்த வாரம் தியேட்டர் & OTT-யில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன?