பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் 'ஓ மண பெண்ணே' பாடலை வெளியிட்ட தனுஷ்! வீடியோ

By manimegalai aFirst Published Feb 26, 2021, 11:14 AM IST
Highlights

நடிகர் ஹரீஷ் கல்யாண் - பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் "ஓ மண பெண்ணே" படத்தின் முதல் சிங்கிள்  பாடலை, முன்னணி நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 

நடிகர் ஹரீஷ் கல்யாண் - பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் "ஓ மண பெண்ணே" படத்தின் முதல் சிங்கிள்  பாடலை, முன்னணி நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கார்த்திக் சுந்தரம் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ஓ மண பெண்ணே'.  இந்து திரைப்படம் கடந்த 2011ஆம் ஆண்டு நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ரீத்து வர்மா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'பெல்லி சூப்புலு திரைப்படத்தின் ரீமேக் ஆக எடுக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் முதன்முறையாக நடிகர் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.  ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது LazySong  என்கிற பாடலின் முதல் சிங்கிள் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் படப்பிடிப்புகள் நடத்த மத்திய மாநில அரசுகள் தளர்வு அறிவித்ததை அடுத்து உரிய பாதுகாப்புடன் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளது.

மேலும் செய்திகள்: ஸ்லீவ் லெஸ் உடையில் ஹீரோயின்களையே தூக்கியடிக்கும் அனிகா! குட்டி நயன்தாரான சும்மாவா?
 

அந்த பாடல் இதோ... 

click me!