எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை.... கி. ராஜநாராயணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ப்ரியா பவானிசங்கர்!

Published : May 18, 2021, 02:37 PM IST
எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை.... கி. ராஜநாராயணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ப்ரியா பவானிசங்கர்!

சுருக்கம்

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் வயது முதிர்வு காரணமாக இன்று தன்னுடைய 99 பது வயதில் காலமானார். இவருக்கு, பலர் தங்களுடைய இறங்களுடைய இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், நடிகை ப்ரியா பவானிஷங்கர் மிகவும் உருக்கமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு போட்டுள்ளார்.  

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் வயது முதிர்வு காரணமாக இன்று தன்னுடைய 99 பது வயதில் காலமானார். இவருக்கு, பலர் தங்களுடைய இறங்களுடைய இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், நடிகை ப்ரியா பவானிஷங்கர் மிகவும் உருக்கமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு போட்டுள்ளார்.

கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர்  கி.ராஜநாராயணன். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர்.1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர். கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்றுள்ளார். 

இவரது மறைவிற்கு நடிகை பிரியா பவானிஷங்கர், மிகவும் உருக்கமாக போட்டுள்ள பதிவில்... "கி.ராஜநாரயணன், தமிழ் பேசினா fine கட்டனும்னு class leader-அ பெயர் எழுத சொல்ற school-ல, we are trained and tamed to think in English for 14 long years. அப்படி ஒரு வாழ்க்கைமுறையில் ஒரு private librarian பரிந்துரையில் ‘கோபல்ல கிராமம்’ மூலம் அறிமுகமானவர் தான் கி.ரா, அப்புறம் 14,15 வயதில், ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’ அப்படிங்கற பேர் நம்மல impress பண்ண, ஒரு குறுகுறுப்புடன் அதை librarian கிட்ட வச்ச என்னை நினைச்சா எனக்கே சில சமயம் இப்படி இருக்கும். அதன் வழி கி்.ரா இன்னும் பரிச்சயமாகிறார். அவருடைய சிறுகதைகள் நான் வாழாத உலகத்தை மனசுல பதியவச்சுது. எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை. இப்பவும் என்னை புன்னகைக்க வைக்கிறார். நிறைவான வாழ்க்கை. என பதிவிட்டுள்ளார்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?