இயக்குனர் பார்த்திபன் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய 'ஒத்த செருப்பு'..! குவியும் வாழ்த்து..!

By manimegalai aFirst Published May 18, 2021, 11:50 AM IST
Highlights

"ஒத்த செருப்பு சைஸ் 7" திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது.  ஒரே ஒரு ஆள் மட்டுமே நடித்த இந்திய திரைப்படம் என்ற பெருமை இதற்கு உண்டு. 

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் வெற்றிகண்டவர் பார்த்திபன். புதுமை விரும்பியான இவர் தனது படங்கள் மூலமாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பார்த்திபன் இயக்கி, தயாரித்து, அவர் மட்டுமே நடித்த "ஒத்த செருப்பு சைஸ் 7" திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது.  ஒரே ஒரு ஆள் மட்டுமே நடித்த இந்திய திரைப்படம் என்ற பெருமை இதற்கு உண்டு. 

இந்த திரைப்படம், ஆஸ்கர் விருதுக்கு சென்று வந்தது, அதே போல்...  சிறந்த படமாக தேசிய விருதையும் பெற்றது. தொடர்ந்து பல்வேறு விருதுகளை இப்படம் குவித்த நிலையில், இப்படம் குறித்த சூப்பர் தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பார்த்திபன். 

என் தமிழ் அழகு.என்னை கூடுதல் அழகாக்குவதும் தமிழ் தட்டுத்தடுமாறி ஆங்கிலமும், தப்பித்தவறி மற்ற மொழிகளும் பேச முயன்றதுண்டு.ஹிந்தி முஜே நஹி மாலும் ஹே! But ‘ஒத்த செருப்பு’ ஹிந்தியும் விரைவில் ஆங்கிலமும் பேச இருப்பதால்,இரு மொழிகளிலும் அறிவும் ஆற்றலும் நிறைந்த ஒரு இரு மொழிகளிலும் அறிவும் ஆற்றலும் நிறைந்த ஒரு Personal Assistant (பால் பாகுபாடில்லை) தேவைப்படுகிறார்.ஈடுபாட்டுடன் பணிப்புரிய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலால் என அறிவித்திருந்தார்.

பார்த்திபனின் இந்த அறிவிப்பை அடுத்து பலரும் அவரை தொடர்பு கொண்ட நிலையில் சற்றுமுன் அவர் கூறியிருப்பதாவது: P A வேணும்னு கேட்டால், rupeeயே வேணாம்,வேலை செய்றேன்னு நிறைய விண்ணப்பங்கள்.அன்புக்கு நன்றி. வந்தவை அனைத்தும் சிறப்பாயினும் ஒன்றை தேர்ந்தெடுப்பது என் இயலாமை.மன்னிக்க. இன்னும் 3 தினங்களுக்குள் வரும் விண்ணப்பங்களில் தேர்வு செய்யப்படும். நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரது இந்த அறிவிப்பு மூலம், பல வருடங்களாக பாலிவுட் மற்றும் ஹோலிவுட்டில் படம் இயக்க வேண்டும் என, கனவு கண்டது நினைவாகி உள்ளது. எனவே ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

P A வேணும்னு கேட்டால்,
rupeeயே வேணாம்,வேலை செய்றேன்னு நிறைய விண்ணப்பங்கள்.அன்புக்கு நன்றி. வந்தவை அனைத்தும் சிறப்பாயினும் ஒன்றை தேர்ந்தெடுப்பது என் இயலாமை.மன்னிக்க.
இன்னும் 3 தினங்களுக்குள் வரும் விண்ணப்பங்களில் தேர்வு செய்யப்படும்.நன்றி pic.twitter.com/n1SD1Fk30R

— Radhakrishnan Parthiban (@rparthiepan)

click me!