80 வயதில் என் ஞானதந்தையை இழந்து விட்டேன்... நடிகர் சிவகுமார் உருக்கமான இரங்கல்..!

By manimegalai aFirst Published May 18, 2021, 10:49 AM IST
Highlights

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் வயது முதிர்வு காரணமாக இன்று தன்னுடைய 99 பது வயதில் காலமானார். இவருக்கு, அரசியல் வாதிகள், முதலமைச்சர் ஸ்டாலின், வைகோ, ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், 80 வயதில் தன்னுடைய... ஞான தந்தையை இழந்து விட்டதாக உருக்கமாக தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார் நடிகர் சிவகுமார்.
 

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் வயது முதிர்வு காரணமாக இன்று தன்னுடைய 99 பது வயதில் காலமானார். இவருக்கு, அரசியல் வாதிகள், முதலமைச்சர் ஸ்டாலின், வைகோ, ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், 80 வயதில் தன்னுடைய... ஞான தந்தையை இழந்து விட்டதாக உருக்கமாக தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார் நடிகர் சிவகுமார்.

கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர்  கி.ராஜநாராயணன். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர்.1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி.  ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர். கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற,  புதுச்சேரி, லாஸ்பேட்டை பகுதியில் உள்ள அரசு குடியிருப்பில் வாழ்த்து வந்தார். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது. 

இந்நிலையில் இவர் தன்னுடைய 99 வயதில், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு நடிகர் சிவக்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "நான் பிறந்த பத்து மாதத்தில் என் தந்தையை இழந்துவிட்டேன், தற்போது 80 வயதில் எனது ஞானதந்தை 99 வயது கி.ரா.அவர்களை இழந்து விட்டேன். எனக்கும் எழுத்தாளர் கி.ரா.வுக்கும் 35 வருட காலமாக உறவு உண்டு. அந்த மகத்தான மனிதர் கரிசல் மண்ணை பற்றி எழுதிய கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், கரிசல் காட்டுக் கடுதாசி, வட்டார வழக்குச் சொல்லகராதி போன்ற அழியாத படைப்புகள் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டே இருப்பார் அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

லாஸ்பேட்டை அரசுக் குடியிருப்பில் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள கி.ரா.வின் உடல் இன்று மாலை கருவடிக்குப்பம் சுடுகாட்டிற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது. மேலும் இவரது உடலுக்கு அரசு மரியாதை அளிக்க வேண்டும் என, முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!