கோலிவுட்டை சுழட்டி அடிக்கும் கொரோனா... பிரபல இயக்குநரின் தாயார் கொரோனாவுக்கு பலி...!

By manimegalai aFirst Published May 18, 2021, 12:41 PM IST
Highlights

கொரோனா தொற்றால் திரைப்பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து மரணம் அடைந்து வரும் தகவல் கோலிவுட் திரையுலகினரை கலங்க வைத்துள்ளது. இந்நிலையில் இன்று பிரபல இயக்குனர்கள் ஜெர்ரியின் தாயார் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளார். 
 

கொரோனா தொற்றால் திரைப்பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து மரணம் அடைந்து வரும் தகவல் கோலிவுட் திரையுலகினரை கலங்க வைத்துள்ளது. இந்நிலையில் இன்று பிரபல இயக்குனர்கள் ஜெர்ரியின் தாயார் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளார். 

கொரோனா தொற்றால் இதுவரை, இயக்குநர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, காமெடி நடிகர் பாண்டு, பாடகர் கோமகன், துணை நடிகர் மாறன், நடிகர் நிதீஷ் வீரா, இயக்குனர் அருண் ராஜாகாமராஜின் மனைவி என பலர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலையால் பாதிப்புகளும், இழப்புகளும் அதிகமாகவே உள்ளது. மேலும் பலர் தங்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்களையும் இழந்து வருவதாக கூறி வருகிறார்கள். 

கொரோனாவை கட்டு படுத்த ஒருபுறம் தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடந்து வந்தாலும், போதிய அளவில் தடுப்பூசி கிடைக்கவில்லை. அதே போல் ஊரடங்கு பிறப்பித்து, மக்களை பாதுகாப்பதிலும் மத்திய - மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகிறது. மேலும் இந்த கொரோனா பிரச்சனை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதே பலரது பிராத்தனையாகவும் உள்ளது.

இந்நிலையில் தமிழில் அஜித் நடித்த 'உல்லாசம், 'விசில்' உள்பட ஒருசில படங்களை இயக்கிய இரட்டையர்கள் ஜேடி-ஜெர்ரி. இந்த இரட்டையர்கள் தற்போது சரவணா ஸ்டோர்ஸ் அருள் சரவணன் நடித்துவரும் திரைப்படத்தை மிக பிரமாண்டமாக இயக்கி வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது நிலையில் ஒரு சில காட்சிகள் மற்றும் போஸ்ட் புரோடுக்ஷன் பணிகள் மீதம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த இரட்டை இயக்குனர்களில் ஒருவரான ஜெர்ரி அவர்களின் தாயார் சோலையம்மாள் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொடைக்கானலில் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 78. ஜெர்ரி தாயார் மறைவுக்கு தற்போது திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அடுத்தடுத்து பிரபலங்களும், அவர்களது குடும்பத்தினரும் தொடர்ந்து... உயிரிழந்து வரும் நிலையில், தற்போது ஜெர்ரியின் தாயாரும், கொரோனாவிற்கு பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!