கிராமத்து தென்றலாக பிரியா பவானி சங்கர்... திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்து சுடச்சுட வந்த அப்டேட்

By Asianet Tamil cinemaFirst Published Jun 10, 2022, 2:40 PM IST
Highlights

Thiruchitrambalam : திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகிற ஜூலை 1-ந் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. ரிலீசுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளதால் இப்படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. 

தனுஷ் நடிப்பில் தற்போது தயாராகி உள்ள படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தை குட்டி, யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தங்கமகன் படத்துக்கு பின் சுமார் 7 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்த இந்த பிளாக்பஸ்டர் கூட்டணி இப்படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளதால், இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகிற ஜூலை 1-ந் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. ரிலீசுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளதால் இப்படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அந்த வகையில் நேற்று முதல் இப்படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த அப்டேட் வெளியாகி வருகிறது.

Priya Bhavani Shankar as RANJANI in pic.twitter.com/Jr9aL404sK

— Sun Pictures (@sunpictures)

அந்த வகையில் முதலில் ராஷி கன்னா அனுஷா என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் ரஞ்சனி எனும் கிராமத்து பெண் வேடத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்... Vikram BoxOffice : தமிழகத்தில் மட்டும் 100... ஆண்டவர் படு ஜோரு - அசர வைக்கும் விக்ரமின் புது வசூல் சாதனை

click me!