ஆசையாக மாலைபோட வந்த விக்னேஷ் சிவன்.. திடீரென விலகிச் சென்ற நயன்தாரா.. காதலனை இப்படியா ஏமாற்றுவது.?

Published : Jun 09, 2022, 05:33 PM ISTUpdated : Jun 09, 2022, 05:35 PM IST
ஆசையாக மாலைபோட வந்த விக்னேஷ் சிவன்.. திடீரென விலகிச் சென்ற நயன்தாரா.. காதலனை இப்படியா ஏமாற்றுவது.?

சுருக்கம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. அதில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்துள்ளன. அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது. 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. அதில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்துள்ளன. அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வருகின்றன. விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு மாலை சூடா முற்படும்போது நயன்தாரா திடீரென விலகி அவரை ஏங்க வைப்பது போன்ற செம்ம கியூட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.இதை அவரது ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரம் அருகே உள்ள கடற்கரை சாலையில் நட்சத்திர விடுதியில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு அதில் நடந்தது. திருமண வைபவம் முழுவதும் நெட் பிளிக்ஸ் என்ற நிறுவனம் ஒப்பம் எடுத்ததால் அந்நிறுவனம் திருமணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. திருமணத்திற்கு யாரும் செல்போன் எடுத்து வரக்கூடாது, செல்பி எடுக்க கூடாது, புகைப்படம் எடுக்க கூடாது என கெடுபிடிகள் கடைபிடிக்கப்பட்டது. திருமணம் நடைபெற்ற ஹோட்டலுக்கு வெளியில் கூட பொதுமக்கள், மீடியாக்களுக்குகூட அனுமதி மறுக்கப்பட்டது. 80க்கும் மேற்பட்ட  பவுன்சர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி பொதுமக்கள், கடற்கரைக்கு சென்றவர்கள் கூட விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் நடந்தது.

இதில் குறைந்த எண்ணிக்கையிலான முக்கிய பிரபலங்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஹிந்தி நடிகர் ஷாருக்கான் சரத்குமார், சிவகார்த்திகேயன் இயக்குனர் மணிரத்தினம் போன்ற நடிகர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை 10.20 மணிக்கு நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். நயன்தாரா விக்னேஷ் சிவனை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில் இன்று அவரின் கரம் பிடித்தனர். இந்நிலையில் திருமணத்தை முன்னிட்டு கோவை, சென்னை, திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி என தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் இருக்கும் ஒரு லட்சம் பேருக்கு மத்திய உணவு விருது அளிக்கப்பட்டது. சைவம் அசைவம் என இரண்டு வகையான உணவு வழங்கப்பட்டது.

இந்நிலையில் திருமண நிகழ்ச்சி குறித்து பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி வருகிறது, அதற்கான சில கியூட் கிளிக்ஸ்களும் வெளியாகி உள்ளன, அதில் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் கழுத்தில் மாலை சூட்ட முற்படும்போது திடீரென நயன்தாரா விலகி விக்னேஷ் சிவனை ஏமாற்றுவது போன்ற ஓரு புகைப்படம் சமூக வளைதளத்தில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!