எப்பா..கல்யாணமா அது..!! மாஸ்காட்டிய லேடி சூப்பர் ஸ்டார்.. திண்டாடிய ஈசிஆர்.

Published : Jun 09, 2022, 04:23 PM IST
எப்பா..கல்யாணமா அது..!! மாஸ்காட்டிய லேடி சூப்பர் ஸ்டார்.. திண்டாடிய ஈசிஆர்.

சுருக்கம்

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண  நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியைச் சுற்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்நிகழ்ச்சியில் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். 

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண  நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியைச் சுற்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்நிகழ்ச்சியில் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் திருமணம் நடந்த ஓட்டலுக்கு வெளியே அதிகளவில் ரசிகர்கள் பொது மக்கள் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை கடற்கரையில் உள்ள ஹோட்டலில் பிரமாண்டமான முறையில் அரங்க அமைக்க திருமணம் நடைபெற்றது.

இதில் நடிகர் ரஜினிகாந்த், இந்தி நடிகர் ஷாருக்கான் போன்ற பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர். 200க்கும் மேற்பட்ட முக்கிய பிரபலங்கள் நயன்தாரா  திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஓட்டலுக்கு வந்ததால் அங்கு நூற்று க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ஏராளமான ரசிகர்கள் ஹோட்டலுக்கு வெளியே திரண்டிருந்தனர் அங்கே அவர்களை கட்டுப்படுத்த போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், ஆனால் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்ததால் அவர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ஒருகட்டத்தில்  ரசிகர்கள் மற்றும் பொது மக்களை போலீசார் விரட்டியடித்தனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எனவே ஈசிஆரில் ஒட்டலுக்கு அருகில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டது, ஈசிஆரில் வழக்கமாக வேகமாக வருவது வழக்கம், வேகமாக வந்த கார்கள் ஹோட்டலுக்கு வெளியே வாகன நெரிசல் ஏற்பட்டிர்ந்த நிலையில் அங்கு சடர்ன் பிரேக் போட்டு நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது  கட்டுப்படுத்த முடியாமல் சில வாகனங்கள் ஒன்றன் பின்னால் ஒன்உ மோதிக்கொண்டன. திருமண மண்டபத்திற்கு வெளியே ஒரு காரை பின்னால் வந்த கார் மோதியதால் காரில் இருந்த பெண்மனி இறங்கி தனது  காரை சேதப்படுத்திய நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் சமாதானப்படுத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். ஒட்டலுக்கு உள்ளே குதுகலமாக திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த நிலையில்  ஹோட்டலுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது, இங்கு வந்திருந்த பலரும் திருமண நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து பேசி வியந்து பேசினர். கல்யாணம்னா இதுதான் கல்யாணம் என்று ரசிகர்கள் அங்கி திரண்ட மக்கள் வாயடைத்து நின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!