
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. கடந்த 2005-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார் நயன்தாரா. இவர் மலையாள நடிகையாக இருந்த போதிலும், தமிழில் நடித்ததன் மூலம் தான் பேமஸ் ஆனார்.
இவர் குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், சூர்யா, ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து கோலிவுட்டில் லேடி சூப்பர்ஸ்டாராக உருவெடுத்தார். சினிமாவில் வெற்றி கிடைத்தாலும் அவரது முதல் இரண்டு காதல்கள் தோல்வியை தான் கொடுத்தன. இருப்பினும் காதல் மீதான நம்பிக்கையை கைவிடாத நயன், கடந்த 2015-ம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டார்.
நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் மலந்த காதல், இன்றளவும் சக்சஸ்புல்லாக நீடித்து வருகிறது. சுமார் 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வரும் இந்த ஜோடி தற்போது தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளனர். இவர்கள் இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இன்று காலை 10:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் தாலியை கட்டினார் விக்னேஷ் சிவன். தற்போது இவர்களது திருமண புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Nayanthara Wedding : நயன்தாரா திருமணத்துக்கு ஆப்சென்ட் ஆன அஜித்... குழந்தைகளுடன் ஷாலினி மட்டும் பங்கேற்பு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.