Nayanthara Wedding : நயன்தாரா திருமணத்துக்கு ஆப்சென்ட் ஆன அஜித்... குழந்தைகளுடன் ஷாலினி மட்டும் பங்கேற்பு

By Asianet Tamil cinema  |  First Published Jun 9, 2022, 1:44 PM IST

Nayanthara Vignesh Shivan wedding : திருமணத்தில் நடிகர் அஜித் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதில் அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோர் கலந்துகொண்டனர்.


நடிகை நயன்தாரா திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்துக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தனது பேவரைட் ஹீரோவான அஜித்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் நடிகை நயன்தாரா. இதனால் அவரும் இந்த விழாவில் தவறாமல் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

Read more!

ஆனால் ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த திருமணத்தில் நடிகர் அஜித் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதில் அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக், ஷாலினியின் சகோதரி ஷாமிலி ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Latest Videos

இதேபோல் நடிகர் சூர்யாவும் தனது காதல் மனைவி ஜோதிகாவுடன் வந்து நயன்தாராவின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டார். நடிகர் விஜய் இன்று மாலை 4 மணியளவில் இந்த விழாவில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது. அவரும் வருவாரா அல்லது அஜித்தைப் போல் ஆப்சண்ட் ஆவாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்...  பலாப்பழ பிரியாணி முதல் பாதாம் அல்வா வரை.... கம கமக்கும் விக்கி - நயனின் திருமண விருந்து - மெனு லிஸ்ட் இதோ

click me!