ஹாஸ்டலில் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் பிரியா பவானி..! கலகலப்பாக வெளியான 'ஹாஸ்டல்' டீசர்!

Published : Jul 16, 2021, 05:52 PM IST
ஹாஸ்டலில் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் பிரியா பவானி..! கலகலப்பாக வெளியான 'ஹாஸ்டல்' டீசர்!

சுருக்கம்

நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடித்துள்ள 'ஹாஸ்டல்' படத்தின் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேப்பை பெற்று வருகிறது.  

நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடித்துள்ள 'ஹாஸ்டல்' படத்தின் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேப்பை பெற்று வருகிறது.

மேலும் செய்திகள்: வெப் சீரிஸில் நடிக்கும் நயன்தாரா..! அதுவும் இந்த பிரமாண்ட படம் பற்றிய தொடரா? ஆச்சர்ய தகவல்!
 

'ஹாஸ்டல்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த ஏப்ரல் மாதம் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நான்கு ஆண்கள் மத்தியில் பிரியா பவானி ஷங்கர் அமர்ந்திருக்கும் போல் இருந்தது. இதை வைத்தே இது ஒரு காமெடி படம் என்பதை பலரும் யூகித்து விட்டனர். தற்போது இந்த படத்தின் டீசரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

மலையாளத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான 'அடி கப்பியாரே கூட்டமணி'. என்கிற படத்தின், ரீமேக்காக இந்த படம் தமிழில் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சில வருடங்களாகவே இந்த படத்தின் ரீமேக் குறித்த தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. 

விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தபோது இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் இந்த டீசர் உள்ளது. பிரியா பாவனியிடம் 50 ஆயிரம் பெற்று, வேறு வழியே இல்லாமல் அவரை ஹாஸ்டலுக்குள் அழைத்து செல்லும் அசோக் செல்வன், பின்னர் ஹாஸ்டல் வார்டன் மற்றும் ஃபாதரின் கண்ணில் படாமல் இவரை இப்படி மறைகிறார், இதற்க்கு அவரது நண்பர்கள் எப்படியெல்லாம் உதவுகிறார்கள் என்பதை வைத்து தான் இந்த படம் உருவாகியுள்ளது என்பது டீசரில் இருந்தே தெரிகிறது.

மேலும் செய்திகள்: 'வலிமை' படத்தின் அசத்தல் அப்டேட்... அடுத்தடுத்து 'தல' ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!
 

டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆர் . ரவீந்திரன் தயாரிப்பில் சுமந்த் ராதா கிருஷ்ணன் இயக்கத்தில், உருவாகியுள்ள  'ஹாஸ்டல்' படத்தில்,  நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு போபோ என்பவர் இசையமைத்துள்ளார். விரைவில் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!