நடிகர் கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது!

By manimegalai aFirst Published Jul 16, 2021, 2:17 PM IST
Highlights

நடிகர் விஷாலை வைத்து, 'இருபுதிரை', மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' ஆகிய படங்களை இயக்கிய... இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்க உள்ள 'சர்தார்'. திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது.
 

நடிகர் விஷாலை வைத்து, 'இருபுதிரை', மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' ஆகிய படங்களை இயக்கிய... இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்க உள்ள 'சர்தார்'. திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது.

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சுல்தான்' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதை தொடர்ந்து கார்த்தியின் கை வசம், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மட்டுமே இருந்தது. எனவே கொரோனா இரண்டாவது அலை காட்டுக்கு வந்த பின்னர் அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் என, இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள படம் குறித்த தகவல் சமீபத்தில் அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்த படத்தில் கார்த்தியின் வித்தியாசமான லூக்குடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை வெளியிடப்பட்டது. இதில் கார்த்தி வயதான தோற்றத்தில் காட்சியளித்தார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் 'கர்ணன்' பட நாயகி ரஜிஷா விஜயன் நடிக்க உள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் நடிகை சிம்ரன் வயதான கார்த்திக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஜிவி. பிரகாஷ் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கு, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். ரூபன் - படத்தொகுப்பாளராக பணியாற்ற உள்ளார். மேலும், திலீப் சுப்புராயன் சண்டை காட்சிகளை வடிவமைக்க உள்ளார். 

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் துவங்கியுள்ளது. இதில் நடிகர் கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 4 நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளதாகவும், இதன் பின்னர் புதுவையில் நடைபெற உள்ள 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பில் கார்த்தி கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
 

click me!