கமல் - விஜய்சேதுபதி - ஃபகத் ஃபாசில் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

By manimegalai aFirst Published Jul 16, 2021, 12:16 PM IST
Highlights

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மூன்று முன்னணி நடிகர்களை வைத்து இயக்கும், 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் எளிய முறையில் துவங்கியது. இதில் இயக்குனர் லோகேஷ், நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மூன்று முன்னணி நடிகர்களை வைத்து இயக்கும், 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் எளிய முறையில் துவங்கியது. இதில் இயக்குனர் லோகேஷ், நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்: 3 தேசிய விருது வென்ற பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்..! அதிர்ச்சியில் திரையுலகினர்!
 

'மாஸ்டர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் யாரை வைத்து இயக்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்க உள்ளதாக அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. கமல்ஹாசன் அரசியல் பணிகளில் பிசியாக இருந்ததாலும், கொரோனா பேரிடர் காரணமாக படப்பிடிப்பு துவங்குவதால் தாமதம் ஏற்பட்ட நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

மேலும் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது. இதில் கமல்ஹாசன் மற்றும் விஜய்சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதே போல் விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளதை தெரிவிக்கும் விதமாக, கடந்த வாரம் ஜூலை 10 ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியது. விஜய் சேதுபதி, கமல், ஃபகத் பாசில் ஆகிய மூவரின் முகமும் இதில் இடம் பெற்றிருந்தது. 

மேலும் செய்திகள்: கதையின் நாயகனாக நடிக்கும் கருணாஸ்... ஜோடியான பிக்பாஸ் நடிகை! யார் தெரியுமா?
 

அதே நேரத்தில் பல ரசிகர்கள் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'விருமாண்டி' படத்தின் போஸ்டருடன் ஒப்பிட்டிருந்தனர். இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன், முதலில் பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகத்தில், முதலில் நடிப்பாரா..? அல்லது 'விக்ரம்' படத்தில் நடிப்பாரா? என்கிற சந்தேகம் ரசிகர்கள் மனதில் இருந்த நிலையில், இன்று பூஜையுடன் படப்பிடிப்பை 'விக்ரம்' படக்குழு துவங்கியுள்ளது. இது குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

 

click me!