டி.ஆர்.பியை எகிற வைக்க மூன்றே மாதத்தில் சூப்பர் ஹிட் படத்தை திரையிடும் தனியார் தொலைக்காட்சி! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Published : Apr 09, 2019, 05:19 PM IST
டி.ஆர்.பியை எகிற வைக்க  மூன்றே மாதத்தில் சூப்பர் ஹிட் படத்தை திரையிடும் தனியார் தொலைக்காட்சி! அதிர்ச்சியில் ரசிகர்கள்

சுருக்கம்

சின்னத்திரை தொலைக்காட்சிகளை பொறுத்தவரை யார் அதிகம் டி.ஆர்.பியை பிடிக்கின்றனர் என்பது தான்,  அனைத்து தொலைக்காட்சி சேனல்களுக்கு இடையே நடக்கும் கடுமையான போட்டி. இதற்காக வாரத்தில் ஐந்து நாட்கள் சீரியல்கள் ஒளிபரப்பி வீட்டில் இருக்கும் இல்லத்தரகள் மதனை கவர்கின்றனர்.   

அதே போல் வாரத்தில் இரண்டு நாட்கள் புதிய படங்களை ஒளிபரப்பு செய்து, வீட்டில் இருக்கும் அனைவரையும் கவர்கின்றனர். 

அதிலும் குறிப்பாக, விசேஷ நாட்கள் என்றால், குழந்தைகள், பெரியவர்கள் , இளைஞர்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் விதமான படத்தை ஒளிபரப்பு செய்து, டி.ஆர்.பி யை எகிறவைக்க வேண்டும் என்பதே அவர்களின் டார்கெட். 

இந்நிலையில்,  வரவிருக்கும் தமிழ் புத்தாண்டை ஒட்டி, பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான, 'பேட்ட' படத்தை ஒளிபரப்பாக்க உள்ளனர். 

இந்த படம் வெளியாகி, மூன்று மாதங்கள் மட்டுமே ஆகும் நிலையில் தற்போது சின்னத்திரையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒளிபரப்பாக உள்ளது ரஜினி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. எனினும் இந்த படத்தை திரையரங்கில் பார்க்க மிஸ் செய்தவர்களுக்கு, வீட்டிலேயே ஜாலியாக பார்க்க இப்படி ஒரு வாய்ப்பு சில மாதங்களிலேயே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீண்ட நாள் காதலரை கரம் பிடித்த நடிகைகள்; 2025 ல் திருமணம் செய்த நடிகைகளின் பட்டியல்!
பெண்களின் உடை குறித்து சிவாஜியின் கமெண்ட்ஸ்... சின்மயி, அனசுயா பதிலடி